இங்கிலாந்து டெஸ்ட்.. நியூசிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இந்திய தொடர் ஹீரோக்களுக்கு இடமில்லை.. அதிரடி மாற்றம்

0
220
NZ

நியூசிலாந்து தங்கள் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. நாளை முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஏற்கனவே இங்கிலாந்து தனது பிளேயிங் லெவனை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய தொடர் ஹீரோக்களுக்கு இடமில்லை

நாளை தொடங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இந்திய டெஸ்ட் தொடரில் அசத்திய சுழல் பந்துவீச்சு கதாநாயகர்கள் மிட்சல் சான்ட்ன்ர் மற்றும் அஜாஸ் படேல் இருவருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் ஏற்கனவே அஜாஸ் படேல் ஒரு இன்னிங்ஸில் மும்பையில் வைத்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த பிறகு நியூசிலாந்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உலக டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளில் சுழல் பந்துவீச்சாளரை தவிர்க்கும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள்

இந்தப் பிளேயிங் லெவனில் நியூசிலாந்து அணியில் நாதன் ஸ்மித், வில்லியம் ஓ’ரூர்க், மேட் ஹென்றி மற்றும் டிம் சவுதி என நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் கேப்டனாக டாம் லாதம் தொடர்கிறார். மிக முக்கியமாக கேன் வில்லியம்சன் இந்த தொடரிலும் விளையாடவில்லை.

இந்த நியூசிலாந்து பிளேயிங் லெவனில் முக்கிய பேட்ஸ்மேன்களான கான்வே, சச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், வில் யங் ஆகியோர் தொடர்கிறார்கள். இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக நியூசிலாந்து கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 201 ரன் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்.. பங்களாதேஷ் அணிக்கு சோகம்

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம், டாம் ப்ளூன்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், டிம் சவுத்தி, வில்லியம்சன் மற்றும் வில் யங்.

- Advertisement -