201 ரன் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்.. பங்களாதேஷ் அணிக்கு சோகம்

0
476
WI

தங்களது சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

பங்களாதேஷ் அணி இந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்களாதேஷ் அணி விளையாடுகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

- Advertisement -

இழுத்து சென்ற டெஸ்ட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 450 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் அடித்து 115 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் ஹஸன் மஹ்மூத் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து விட்டது. அந்த அணிக்கு ஜாகீர் அலி 53 ரன்கள், மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்தார்கள். அல்ஜாரி ஜோசப் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 152 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அலிக் ஆதனஸ் 42 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டஸ்கின் அகமத் ஆரு விக்கெட்டை கைப்பற்றினார். பங்களாதேஷ் அணிக்கு 354 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஐந்தாவது நாளுக்கு சென்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி இறுதியாக 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மெஹதி ஹசன் மிராஸ் 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச் மற்றும் சீல்ஸ் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : நான் மஹி பாயை மிஸ் செய்வேன்.. எனக்காக அவர் இத செஞ்சிருக்காரு – தேஷ்பாண்டே உருக்கமான பதிவு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றிக்குப் பிறகு புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டு இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் எட்டாவது இடத்தில் தொடர்கிறது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வாய்ப்புள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அடுத்த மூன்று இடங்களில் இலங்கை நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, அணிகள் இருக்கின்றன. அடுத்த இடங்களில் வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன.

- Advertisement -