ஆஸிக்கு தரமாவும் .. இந்தியாவுக்கு மோசமாவும் பயிற்சி ஆடுகளம் கொடுத்தது ஏன்? – ஆடுகள அமைப்பாளர் தெரிவித்த காரணம்

0
941
ICT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் பழையதாக இருந்ததற்கான காரணம் குறித்து, அந்த மைதானத்தின் ஆடுகள தயாரிப்பாளர் மாட் பேஜ் வித்தியாசமான காரணத்தை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிய, இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. எனவே நான்காவது போட்டியை வெல்லும் அணி தொடரை இழக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பயிற்சிக்கு வழங்கப்பட்ட மோசமான ஆடுகளம்

இந்திய அணிக்கு பவுன்ஸ் குறைவான மிகவும் டயர்டு பிட்ச் அதாவது பழைய ஆடுகளம் பயிற்சிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் பயிற்சியின்போது காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு ஏன் இப்படி தரமற்ற ஆடுகளும் பயிற்சிக்கு கொடுக்கப்பட்டது? என வெளியில் இருந்து நிறைய கேள்விகளும் இருந்தது. தற்போது இதற்கு அந்த குறிப்பிட்ட மைதானத்தின் ஆடுகள தயாரிப்பாளர் ஒரு வித்தியாசமான காரணத்தை கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

ஆடுகள தயாரிப்பாளர் அளித்த விளக்கம்

இதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் பயிற்சி ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கிறது. இது போட்டிக்கு கொடுக்கப்படும் ஆடுகளம் போலவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெல்போன் மைதான ஆடுகளை தயாரிப்பாளர் மாட் பேஜ் போட்டிக்கு இப்படியான ஆடுகளங்கள் கொடுக்கப்படாது என்றும், போட்டிக்கு வேறு மாதிரி வித்தியாசமான ஆடுகளம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : பும்ரா கிட்ட உலகத்துல யாராலும் முடியல.. ஆஸி இத மட்டும் தான் செய்யணும் – சைமன் கேடிச் பேட்டி

மேலும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட பழைய ஆடுகளம் குறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் இரு அணிகளுக்குமே புதிய பயிற்சி ஆறு காலங்களை கொடுப்போம். ஆஸ்திரேலியா இன்று தான் பயிற்சிக்கு வருகிறது எனவே அவர்களுக்கு புதிய பயிற்சி ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டது. இந்திய அணி முன்கூட்டியே பயிற்சியை ஆரம்பித்து விட்டதால் அவர்களுக்கு பழைய ஆடுகளங்கள் பயிற்சிக்கு கொடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் புதிய ஆடுகளம் கொடுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -