2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் நியூசிலாந்தின் இடது கை துவக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டெவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு கிடைத்தார். அந்த ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கப்பட்ட பெரிய வீரர் இவர்தான்.
இதேபோல் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் 1.80 கோடி ரூபாயில் நியூசிலாந்தின் இன்னொரு இடது கை துவக்க ஆட்டக்காரர், இடது கை பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் ரச்சின் ரவீந்தரா 1.80 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தார். இவர் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 17வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இவருக்குப் பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரராக இடம் கிடைத்தது.
15 பந்தில் ரச்சின் ரவீந்தரா உருவாக்கிய தாக்கம்
இன்றைய போட்டியில் வெறும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்த இவர் தலா மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் உடன் 37 ரன்கள் குவித்து, அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு இருந்த அழுத்தத்தை மொத்தமாக எடுத்து விட்டு வெளியேறி விட்டார். இவர் கொடுத்த இம்பேக்ட், அடுத்து இம்பேக்ட் பிளேயர் ஆக வந்த சிவம் துபே பொறுமையாக விளையாடுவதற்கு உதவியது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இறுதியில் சிவம் துபே 34 ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் 18.4 ஓவர்களில் ஆர்சிபி அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் மைதானத்தில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்லவில்லை என்கின்ற சோகம் தொடர்கிறது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்திய ரச்சின் ரவீந்தரா பேசும்பொழுது “இது அழகான கம்ப்ளீட் பர்பாமென்ஸ்.ஒரு அணியாக எங்களுக்கு கிடைத்த வெற்றி. போட்டியில் இறுதி வரை நாங்கள் எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தோம். ருத்ராஜ் மற்றும் ரகானே இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். நான் என்னை சிறந்த துவக்க வீரர் என்று என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். நான் டெஸ்ட் விளையாடி வந்த காரணத்தினால், வெள்ளைப் பந்தில் விளையாடுவதற்கு மூன்று நான்கு நாட்கள் பயிற்சி எடுத்தேன்.
இதையும் படிங்க : மேட்ச்ல திருப்புமுனை இதுதான்.. நாங்க மூணு பேர் இந்த விஷயத்தை இனி செய்யனும் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
அதே சமயத்தில் நாங்கள் பயிற்சி செய்த விக்கெட் வேறு மாதிரி இருந்தது. தொடக்கத்தில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. நான் பந்தை நன்றாக அடிக்கிறேனா? என்று தெரியவில்லை. ஆனால் பதட்டம் இல்லாமல் என்னை செட்டில் செய்து கொள்ள உதவியது. நீங்கள் ஏற்கனவே பழகி நேரம் செலவிட்ட ஒன்று இரண்டு பேர் உங்கள் அணியில் இருப்பது, கொஞ்சம் புது சூழலில் சீக்கிரத்தில் இயல்பாக உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.