உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா செய்த மாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்.. காட்டடி அடித்த பேட்ஸ்மேன்கள்.. தொடரும் அதிரடி!

0
643
Quinton

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று புனே மைதானத்தில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி அசத்தியிருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து குயின்டன் டி காக் மற்றும் வான்டர் டேசன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்து அதிரடியாக ரன்கள் கொண்டு வந்தது. சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் சதம் அடித்து அசத்தினார். அவருக்கு நடப்பு உலக கோப்பை தொடரில் இது நான்காவது சதமாகும்.

சதம் அடித்து சிறப்பாக விளையாடிய அவர் 116 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

அடுத்து இவருடன் சேர்ந்து விளையாடிய வான்டர் டேசன் அவரும் சதம் அடித்தார். 118 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 133 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 30 பந்துகளில் இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஹென்றி கிளாசன் 7 பந்துகளில் 15 ரன்கள், மார்க்ரம் ஒரு பந்தில் ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது.

உலகக்கோப்பையில் முதல் ஏழு போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 545 ரன்கள் குவித்து குயிண்டன் டி காக் முதலிடத்தில் இருக்கிறார்.

இதேபோல் கடைசி எட்டுப் போட்டிகளில் முதலில் விளையாடி 350 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஒரே அணியாக தென் ஆப்பிரிக்க அணி தனியான ஒரு உலகச் சாதனையை படைத்திருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக தென் ஆப்பிரிக்க அணி வெறும் ஏழு ஆட்டத்தில் மாறி இருக்கிறது. இதுவரை தென் ஆப்பிரிக்காணி இந்த உலகக்கோப்பை தொடரில் 77 சிக்ஸர்கள் அடித்திருக்கிறது. இந்தப் போட்டியில் மட்டும் 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!