ராணுவத் தேர்வில் தோல்வி ஐபிஎல் ஏலத்தில் வெற்றி – யார் இந்த அவினாஷ் சிங்?!

0
2741
avinash singh

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல இளைஞர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாய் இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது . ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கம்ரான் கான் முதல் பிரவீன் தாம்பே வரை எண்ணற்ற கிரிக்கெட் வீரர்களை உலகறிய செய்துள்ளது ஐபிஎல் .

ஒவ்வொரு வருட ஐபிஎல் ஏலத்திற்கு பின்பும் கிரிக்கெட்டில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று . பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வரும் திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் ஒரு வரப்பிரசாதம். இதற்கு முன்பும் முகமது சிராஜ் குல்தீப்சன் சேட்டன் சக்கரியா போன்ற வீரர்கள் ஐபிஎல்’இன் மூலம் புகழின் உச்சியை அடைந்தார்கள் .

- Advertisement -

அவர்களின் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் அவினாஷ் சிங்
24 வயது வேக பந்து வீச்சாளரான இவர் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்தவர் . தன் வாழ்நாளில் பெரும்பகுதியை டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலேயே கழித்துக் கொண்டிருந்தவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் ஹார்டூ பால் கிரிக்கெட் ஆடத் தொடங்கி இருக்கிறார். தற்போது இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார் .

அவினாஷ் சிங் பலமுறை இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு தேர்வு எழுதியும் தோல்வி அடைந்த அவர் கனடா செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அந்த நேரத்தில் இன்டர் லாண்ட் ஸ்கவுட் என்ற முறையில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி ஆர்சிபி அணி வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து கொண்டிருந்தது . அந்த முறையில் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் அவினாஷ் சிங் ஆவார்.

ஆர்சிபி அணிக்காக வீரர்கள் தேர்வில் கலந்து கொண்ட அவினாஷ் சிங் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பதிவு செய்தார் . அதன் பிறகு தொடர்ந்து பயிற்சி மூலம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தை எட்டினார். ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மலிக் 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் முறையில் நடத்தப்பட்ட பந்திவீச்சாளர்களுக்கான தேர்வில் 10,000 பேர் கலந்து கொண்டனர் அதில் முதல் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அவினாஷ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது .

எங்களின் பயிற்சி ஆட்டங்களின் போது அவர் சிறப்பாக பந்து வீசினார் . அதனால் இந்த வருட ஏலத்தில் அவரை நிச்சயமாக நாங்கள் தேர்ந்தெடுப்போம் என்று உறுதியாக இருந்தோம் . ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எங்களுக்கு கடும் போட்டியை தந்தது இருப்பினும் நாங்கள் விடா முயற்சியாக அவினாஷ் சிங்கை எங்கள் அணிக்காக தேர்ந்தெடுத்தோம் என்று ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.