இந்திய கிரிக்கெட்

ராணா 6 பந்தில் 4 விக்கெட்.. கில் ஜெய்ஸ்வால் நிதிஷ் கலக்கல்.. இந்தியா ஆஸி அணியை பயிற்சி போட்டியில் வென்றது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று இதற்கான பயிற்சி போட்டி நடைபெற்றது.

19 வயது ஆஸி சூப்பர் ஸ்டார்

இந்த பயிற்சி போட்டி இரண்டு நாட்கள் கொண்டதாக திட்டமிடப்பட்டது. ஆனால் நேற்று தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் போட்டி நடைபெறவில்லை. இன்று இந்த பயிற்சி டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் தலா 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு 19 வயதான இளம் துவக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் 97 பந்துகளில் அதிரடியாக 107 ரன்கள் குவித்தார். இவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் எதிர்கால வீரராகபார்க்கப்படுகிறார். விரைவில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா தான் வீசிய 23 மற்றும் 25வது ஓவர்களில் மொத்தமாக 6 பந்தில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி வேகமாக சரிந்தது. ஆனால் கடைசியில் வந்த ஹன்னோ ஜேக்கப்ஸ் 60 பந்தில் 61 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஹர்சித் ராணா 4, ஆகாஷ் தீப் 2, சிராஜ் 1, ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

ஜெய்ஸ்வால் – கில் நம்பிக்கை

இதைத் தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் 44 பந்தில் 27 ரன்கள் எடுத்து மற்றவர்கள் விளையாட வழி விட்டு ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். தொடர்ந்து ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில்.. இந்த வீரரை வாங்க 520 கோடி இருந்தால் கூட போதாது – ஆசிஷ் நெக்ரா பேட்டி

இந்த போட்டியில் விளையாட வந்த கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 62 பந்தில் 50 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். நிதீஷ் குமார் ரெட்டி 32 பந்தில் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 31 பந்தில் 27 ரன், சர்ப்ராஸ் 4 பந்தில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை நின்று 31 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -
Published by

Recent Posts