இந்திய டீம் பண்றத.. தீக்சனா பச்சையா உடைச்சு சொல்லிட்டார்.. அது உண்மைதான் – அஸ்வின் ஒப்புதல்

0
3133
Ashwin

இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி வென்ற பிறகு, இந்திய அணிக்கு எதிராக எப்படி ஆன திட்டம் தீட்டப்பட்டது என்பது குறித்து இலங்கை வீரர் தீக்சனா பேசியிருந்த விஷயத்தை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரித்து பேசியிருக்கிறார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற பிறகு பேசி இருந்த தீக்சனா இந்தியா உள்நாட்டில் சிறிய மைதானங்களில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்களில் விளையாடுகிறது என்றும், இதன் காரணமாக இலங்கையில் பெரிய மைதானத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது என முடிவு செய்ததாகக் கூறியிருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் தீக்சனா கருத்தை ஆமோதித்து இந்தியா உள்நாட்டில் இப்படியான சூழ்நிலையிலேயே விளையாடுகிறது எனவும், எனவே இதை வைத்து இலங்கை அணி கொண்டு வந்த திட்டம் மிகவும் சரியான ஒன்றாகவும் இருந்திருக்கிறது எனவும் பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “போட்டி முடிந்த பிறகு தீக்ஷனாவிடம் வெற்றி பெற்றது எப்படி என கேட்ட பொழுது அவர் யோசிக்காமல் இந்திய அணி சிறிய மைதானங்களில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதால் நாங்கள் இலங்கையில் பெரிய மைதானம் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்க திட்டமிட்டோம் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 113 ஓவர் 8 விக்கெட்.. கடைசியில் வெஸ்ட் இண்டிஸ் கம்பேக்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.. முதலாவது டெஸ்ட்

இந்தியா உள்நாட்டில் இப்படியான வத்திப்பெட்டி மைதானங்களில், பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலையில்தான் விளையாடி வருகிறது. எனவே அவர்கள் சிறிய மைதானத்தை இந்திய அணிக்கு கொடுத்தால் திருப்பி ரன்கள் அடிப்பதற்கான சக்தி இல்லை என்பதையும், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் கொடுத்தால் 250 ரன்கள் எடுப்போம், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்றால் 230 ரன்கள் எடுப்போம் என்பதால், இந்த முடிவை எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.