தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் சுக்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரின் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி மிக வலிமையான இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய போதிலும், சுழல் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 மற்றும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்த இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மக்முத் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது நாளில் இந்தியா அதிரடி
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாட வந்த பங்களாதேஷ் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய சோதனையை கொடுத்தார்கள். பங்களாதேஷ் அணி பரிதாபமாக 149 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. தளத்தில் சுப்மன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருந்தார்கள். இன்று இவர்கள் இருவரும் இந்திய அணியை நல்ல ரன்னுக்கு முன்னேற்ற வேண்டிய அவசியம் இருந்தது.
மூன்றாவது நாள் அதிரடி
இந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தொடர்ந்து விளையாட வந்தார்கள். இந்த ஜோடியில் இருவருமே ஆரம்பத்தில் விக்கெட் கொடுத்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து விளையாடினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியில் இறங்கினார்கள். சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் அடித்தார்கள்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் அதுல என்ன விட பெரிய ஆளு.. அவருக்காக பணம் கொடுத்து போட்டிய பார்ப்பேன் – கில்கிறிஸ்ட் பாராட்டு
சுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருக்கிறார். மேலும் ரிஷப் பண்ட் 638 நாட்கள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அரை சதத்தை அடித்திருக்கிறார். இன்று மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 432 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. சுப்மன் கில் 86(137), ரிஷப் பண்ட் 82(102) ரன்களுடன் களத்தில் நிற்கிறார்கள்