உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ரிஷப் பண்ட் தன்னைவிட ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சிறந்தவராக இருப்பதாக பாராட்டி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் இரண்டு வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி தற்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். மேலும் அவருக்கு இருக்கும் திறமையின் காரணமாக மீண்டும் வந்தது உடனே அவருக்கு இந்திய அணியில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் முதல் துலீப் டிராபி வரை
இந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய ரிஷப் பண்ட் மிகச் சிறப்பான முறையில் விளையாடி 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். மேலும் யாரும் எதிர்பார்க்காததை விட அவர் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டார். எனவே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு அடுத்து துலீப் டிராபிக்கு சமீபத்தில் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அந்தத் தொடரில் அரை சதம் அடித்து தான் இந்த வடிவத்திலும் விட்டு சென்ற இடத்திலேதான் இருக்கிறேன் என நிரூபித்தார். எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இப்படி மூன்று கிரிக்கெட் வடிவத்திலும் இந்திய அணிக்குள் மீண்டும் ரிஷப் பண்ட் திரும்பி வந்தார்.
என்னை விட ரிஷப் பண்ட் சிறந்தவர்
இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசி இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “ரிஷப் பண்ட் என்னைவிட கொஞ்சம் தாக்கி அதிரடியாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். நான் ஆக்ரோஷமான பேட்டிங் பிராண்ட் ஆக இருந்தேன். ஆனால் ரிஷப் பண்ட் அச்சமே இல்லாமல் இருக்கிறார்.எனக்கு அவரிடத்தில் பிடித்த விஷயம் என்னவென்றால் அழுத்தம் ஏற்படும் பொழுது அதிரடியாக விளையாடி அதை எடுத்து விடுகிறார்”
“நீங்கள் சொல்வது என்னவென்றால் ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்ப்பதற்கு மக்கள் பணம் செலுத்துகிறார்கள் என்கிறீர்கள். உண்மையாகவே நான் ரிஷப் பண்ட் விளையாடும் விதத்திற்காக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்ப்பேன்”
இதையும் படிங்க : கோலி நீங்க ரன் அடிக்க முன்ன என்ன செஞ்சிங்க.. பயப்படாம திரும்ப அந்த 3 விஷயங்களை செய்யுங்க – ரவி சாஸ்திரி அட்வைஸ்
“இதை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அவரிடம் தரம் இருப்பதாக அர்த்தம். ரிஷப் பண்ட் சிறந்த முடிவுகளைப் பெற்று அவர் ஒரு வெற்றியாளராக இருக்கிறார். மிகப்பெரிய ஆபத்தில் இருந்தும் தற்பொழுது பிழைத்து வந்திருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் வேடிக்கையானவர். மேலும் வேடிக்கையான வழியிலேயே எல்லாவற்றையும் செய்ய அவருக்கு தெரியும்” என்று கூறி இருக்கிறார்.