பாகிஸ்தான் அணி முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல், பங்களாதேஷ் அணியிடம் முதல் முறையாக டெஸ்ட் தொடரையும் இழந்திருக்கிறது. இதனால் மோசமான சாதனைக்கு உள்ளாகி இருக்கிறது.
தற்பொழுது பங்களாதேஷ் நாட்டில் சூழல் சரியில்லாமல் இருந்து வருகிறது. இப்படியான நேரத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியை பெற்று தற்போது அந்த அணி நாடு திரும்புகிறது.
பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை
பாகிஸ்தான் இந்த தொடருக்கு முன்பாக தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் என்றும் பார்க்காமல் பேட்டிங் செய்வதற்கு மிக அதிகபட்ச சாதகம் கொண்ட ஆடுகளங்களை அமைத்து பார்ப்பவர்களை சோர்வாக்கி வந்தது. ஆனால் இங்கிலாந்து அணி இப்படியான ஆடுகளத்திலும் பாகிஸ்தானில் வந்து மூன்று போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்தது.
பாகிஸ்தான் அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை டிரா செய்து ஒரு போட்டியை தோற்று தொடரை இழந்தது. இதற்கடுத்து உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொட்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியிடம் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியையும் டிரா செய்தது. தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டியையும் தோற்று இருக்கிறது.
பாகிஸ்தான் அணி கடந்த பத்து டெஸ்ட் போட்டிகளாக உள்நாட்டில் வெற்றி பெறவில்லை. இந்த வகையில் முதல் 10 டெஸ்ட் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வேவுக்கு அடுத்தபடியாக உள்நாட்டில் பத்து டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு போட்டியிலும் ஜெயிக்காத அணியாக மாறி இருக்கிறது. மேலும் தொடர்ந்து உள்நாட்டில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் தொடர்களில் ஒன்றையும் வெல்லவில்லை.
இந்தியாவின் நீடித்த பெருமை
அதே சமயத்தில் உள்நாட்டில் அதிக நாட்கள் டெஸ்ட் தொடரை இழக்காத அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் நாட்கள் அளவில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணி உள்நாட்டில் எவ்வளவு பலம் வாய்ந்தது என்று தெரிய வருகிறது.
இதையும் படிங்க: கம்பீர் ஸ்டைலில்.. இங்கிலாந்தில் மெக்கலமுக்கு பதவி.. இந்தியாவில் முதல் சவால் – முழு விபரங்கள்
உள்நாட்டில் டெஸ்ட் தொடரை அதிக நாட்கள் இழக்காத அணிகள்
பாகிஸ்தான் – 0 நாட்கள்
வெஸ்ட் இண்டீஸ் – 18 நாட்கள்
பங்களாதேஷ் – 154 நாட்கள்
நியூசிலாந்து – 177 நாட்கள்
இலங்கை – 405 நாட்கள்
இங்கிலாந்து – 1179 நாட்கள்
ஆஸ்திரேலியா – 1324 நாட்கள்
தென் ஆப்பிரிக்கா – 1682 நாட்கள்
இந்தியா – 4279 நாட்கள்