கடைசி 3 டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு.. 4 அதிரடி மாற்றங்கள்.. கோலி இல்லை

0
1558
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எஞ்சி இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே வந்த செய்திகளின்படி விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அவரால் பங்கேற்க முடியாதது குறித்து பிசிசிஐக்கு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் பிசிசிஐ மருத்துவக் குழு ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுலுக்கு காயம் குணமடைந்து விட்டதாக உடல் தகுதி சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

எனவே இவர்கள் இருவரும் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் இவர்கள் உடல் தகுதி கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து விளையாடுவார்கள்.

- Advertisement -

இந்த அணி அறிவிப்பில் பேட்டிங் யூனிட்டில் வெளியில் இருந்து வேறு யாரையும் சேர்க்கவில்லை. அதே சமயத்தில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும் இந்திய அணி பவுலிங் யூனிட்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத முகமது சிராஜ் மீண்டும் வந்திருக்கிறார். இதற்கு அடுத்து பெங்கால் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் அணிக்குள் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆவேஷ் கான் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்கின்ற பேச்சுகள் இருந்தது. ஆனால் கடைசி மூன்று போட்டிகளுக்குமான டெஸ்ட் அணியில் அவர் இடம் பெற்று இருக்கிறார். ஒருவேளை நடுவில் ஏதாவது ஒரு போட்டியில் ஓய்வு தரப்படலாம்.

சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், திலக் வர்மா இப்படியான இளம் வீரர்கள் யாராவது பேட்டிங் யூனிட்டுக்கு அழைக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் சீனியர் வீரர்களில் புஜாரா அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஎல்.ராகுலின் வருகை இதற்கு அவசியம் இல்லாமல் செய்து விட்டது.

இதையும் படிங்க : “ஓய்வு தேவைனா ஐபிஎல் தொடர்ல எடுங்க.. இங்கிலாந்து தொடர்ல எடுக்காதிங்க” – இந்திய வீரர் பற்றி ஆகாஷ் சோப்ரா பேச்சு

கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா (து.கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (வி. கீ), கேஎஸ்.பரத் (வி.கீ), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

- Advertisement -