தொடங்கிய 100 பந்து தொடர்.. நட்சத்திர வீரர்கள் கூட்டம்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்

0
32

நான்காவது 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டி தொடர்களும் ஒரே நாளில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடர்கள் இந்தியாவில் ஒளிபரப்பப்பட உள்ள தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்ட விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தவாறு கிரிக்கெட் போட்டிகள் மாறிவரும் நிலையில், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. தற்போது அதையும் சுருக்கி மேலும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்ட 100 பந்துகள் கொண்ட போட்டி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.

- Advertisement -

இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு என இரண்டிலுமே எட்டு அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் மெக்லானிங், சதர்லேண்ட், ஜெனாசன் போன்ற நட்சத்திர வீராங்கனைகளும், அதுமட்டுமல்லாமல் ஸ்மிருதி மந்தனா, ரிக்ஷா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா போன்ற இந்திய நட்சத்திர வீராங்கனைகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இன்று நடைபெற்ற வரும் முதல் போட்டியில் ஓவல் இன்விசிபிள் உமன்ஸ் அணியும் பிர்மிங்காம் ஃபோனிக்ஸ் உமன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

அதுவே ஆடவர் பிரிவில் இங்கிலாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் விளையாடி வருவதால் அது முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர்கள் நேரடியாக 100 பந்துகள் போட்டி தொடரில் பங்கேற்க இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். மொயின் அலி, ஜாக் கிராவ்லி, ஹாரி ப்ரூக் போன்ற இங்கிலாந்து நட்சத்திரங்களும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் நட்சத்திர வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

- Advertisement -

இந்தத் தொடரை பொறுத்தவரை ஒரே நாளில் ஒரே மைதானத்தில் மகளிர் அணி விளையாடி முடித்தவுடன், ஆண்கள் அணி தங்களது போட்டியில் பங்குபெறும். இந்திய நேரப்படி மகளிர் போட்டிகள் அனைத்தும் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருக்கின்றன. இந்தப் போட்டி நடைபெற்று முடிந்தவுடன் இரவு 11 மணிக்கு ஆடவர் போட்டி நடைபெறும். மேலும் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றால் மகளிர் போட்டிகள் 4 மணிக்கு ஒன்றும், இரவு 07.30 மணிக்கு மற்றொன்று போட்டியும் நடைபெறும்.

இதையும் படிங்க:178 ரன்.. விளாசி தள்ளிய லேடி ஷேவாக் ஷபாலி வர்மா.. நேபாள் அணியை வீழ்த்திய இந்தியா.. மகளிர் ஆசிய கோப்பை 2004

அதுவே ஆடவர் போட்டிகள் இரவு 07.30 மணிக்கு ஒரு போட்டியும், அதற்குப் பின்னர் 11 மணிக்கு ஒரு போட்டியும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும். இந்தப் போட்டி தொடர் முழுவதும் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மொபைலில் சோனி லைவ் ஆப் மூலமாக கண்டு களிக்கலாம். அதுமட்டுமல்லாமல் பேன் கோடு ஆப் இணையதளத்திலும் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

- Advertisement -