178 ரன்.. விளாசி தள்ளிய லேடி ஷேவாக் ஷபாலி வர்மா.. நேபாள் அணியை வீழ்த்திய இந்தியா.. மகளிர் ஆசிய கோப்பை 2004

0
247
Shafali

தற்போது மகளிர் ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பத்தாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி அனுபவும் இல்லாத நேபாள் அணியை லேடி சேவாக் செபாலி வர்மா அதிரடியில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்மிருதி மந்தனா துவக்க இடத்திலும் களமிறங்கவில்லை. அவருடைய இடத்தில் ஹேமலதா இன்று களம் இறங்கினார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. ஹேமலதா 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க வீராங்கனை லேடி ஷேவாக் செபாலி வர்மா 48 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் அதிரடியாக 81 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்து ஜெமிமா ரோட்டரிகியூஸ் அதிரடியாக 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. நேபாள் அணியின் தரப்பில் பந்துவீச்சில் ராணா மகர் நான்கு ஓவர்களுக்கு 25 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணிக்கு 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்கள் எடுத்தார்கள். அதிகபட்சமாக ராணா மகர் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாள் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 96ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : சூர்யா இவங்களோட கேப்டனாதான் இருந்தார்.. ஆனா உடனே எதையும் சொல்லிட முடியாது – அக்சர் படேல் பேச்சு

இந்திய அணி இறுதியாக 82 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தீப்தி சர்மா மூன்று விக்கெட், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிரமாண்ட வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய அணி ஏறக்குறைய இரண்டாவது போட்டி வெற்றியின் மூலமாகவே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -