18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் தயாராக இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான முழு அட்டவணை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையை பார்க்கலாம்.
வெளிவந்த ஐபிஎல் மெகா அட்டவணை
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை அனுபவம் மற்றும் இளமை என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை அணி விளையாடும் போட்டிகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதன் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியாக வருகிற 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னையில் எதிர் கொள்ள உள்ளது. அதற்குப் பிறகு 28ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக சென்னையிலும், பிறகு 30ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக கவுஹாத்தியிலும் விளையாட உள்ளது.
சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்
அதற்குப் பிறகு ஏப்ரல் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 8ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக முல்லன்பூரிலும், பின்னர் 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னையிலும் விளையாட உள்ளது. அதற்குப் பின்னர் 14ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே, பின்னர் 25 மற்றும் 30ம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி.. ஹர்திக் பாண்டியா செய்த காரியம்.. காயமடைந்த நட்சத்திர வீரர்.. பயிற்சியில் என்ன நடந்தது?
20ம் தேதி மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும், மே மூன்றாம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூருவிலும், 7ம் தேதி கேகேஆர் அணிக்கு எதிராக கொல்கத்தாவிலும், 12ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னையிலும் கடைசி மற்றும் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாக்கிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் 20ம் தேதி முதல் குவாலிஃபயர் ஆட்டங்களும் 25ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.






