இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததின் மூலம் இந்திய கேப்டன் சுப்மன் கில் பிரம்மாண்டமான சாதனையை படைத்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்திய அணி இன்னும் 50 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடினால் டிரா செய்ய முடியும். இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினால் போட்டியை வெல்ல முடியும் என்கின்ற சூழ்நிலை நிலவுகிறது.
இங்கிலாந்து முன்னிலை
இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் போட்டி துவங்கிய அரைமணி நேரத்தில் சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கில் சதம் அடித்து 103 ரன்கள் எடுத்து மதிய உணவு இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ஆட்டம் இழந்தார்.
இந்த தொடரில் ஏற்கனவே மூன்று சதங்கள் அடித்து இருந்த கில்லுக்கு இது நான்காவது சதமாக அமைந்தது. இத்துடன் இங்கிலாந்து மண்ணில் ஒரு ஆசிய பேட்ஸ்மேன் அதிக ரன் அடித்தவராக கில் சாதனை படைத்தார். தற்போது 700க்கும் மேற்பட்ட ரன்களை கில் இந்த தொடரில் எடுத்திருக்கிறார்.
கில் புதிய சாதனை
மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக நான்கு சதங்களை இதுவரையில் டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவர் மட்டுமே அடித்திருக்கிறார்கள். தற்போது இந்த எலைட் லிஸ்டில் சுப்மன் கில்லும் சேர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க : தேசபக்தியை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவதை நிறுத்துங்க.. இந்திய வீரர்களுக்கு பாக். வீரர் டேனிஷ் கனேரியா அறிவுறுத்தல்
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்த கேப்டன்கள்:
4 – டான் பிராட்மேன் – எதிரணி இந்தியா (1947)
4 – சுனில் கவாஸ்கர் – எதிரணி வெஸ்ட் இண்டீஸ் (1978)
4 – ஷுப்மன் கில் – எதிரணி இங்கிலாந்து (2025)






