246 ரன்.. 21 போர்.. சாதனை படைத்த ஆப்கன் கேப்டன்.. ஜிம்பாப்வே முதல் டெஸ்டில் அபாரம்.. முழு விபரம்

0
860

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி தோல்வி என்று டிராவில் முடிவடைந்துள்ளது.

இதில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்மதுல்லா ஷாகிதி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில் நான்காவது நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 197 ஓவர்களில் 699 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ரஹ்மத் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதம் அடித்த நிலையில் அவரைத் தொடர்ந்து கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி மிக அபாரமாக விளையாடி அவரும் தனது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

சமனில் முடிவடைந்த முதல் டெஸ்ட்

474 பந்துகளை எதிர் கொண்டு 21 பௌண்டரிகளோடு ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 246 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இது ஒரு ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்னாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மற்றொரு விக்கெட் கீப்பர் ஸஜாய் 169 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 113 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு தொடர்ந்து ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கியது.

இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் இல்லை.. இவர் அவுட் ஆனப்போதான் இந்திய அணி ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணேன் – ரவி சாஸ்திரி பேட்டி

34 ஓவர்களை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டதால் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற இரண்டாம் தேதி முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -