ஜெய்ஸ்வால் இல்லை.. இவர் அவுட் ஆனப்போதான் இந்திய அணி ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணேன் – ரவி சாஸ்திரி பேட்டி

0
1554

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி தோல்வி அடைந்த விதம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இருப்பினும் இந்திய அணியில் சில வீரர்களும் தங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்த போட்டி கடைசி நாள் வரையிலும் சென்றதால் இந்திய அணி இந்த போட்டியில் முடிந்த அளவு டிரா செய்யும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கம்போலவே டாப் பேட்ஸ்மேன்கள் சொதப்ப பின்னால் வந்த வீரர்களும் ஆட்டம் இழந்தனர்.

தேநீர் இடைவேளை முன்பு வரை மூன்று விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் என்று இருந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி ஓரளவு போட்டியை டிராவை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஹெட் பண்ட் விக்கட்டை வீழ்த்த இந்திய அணியின் வீழ்ச்சி அங்கு ஆரம்பித்து அதற்கு பின் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பண்ட் விக்கெட் விழுந்த போதே இந்திய அணியால் வெற்றி பெற முடியாது என்று தான் நினைத்ததாக சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா வெற்றி பெறும் என நினைக்கவில்லை

இது குறித்து ரவி சாஸ்திரி கூறும்போது “ரிஷப் பந்த் விக்கெட் ஒரு பெரிய திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன். மதிய உணவு நேரத்தில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தவுடன் இந்திய அணியால் போட்டியை வெல்ல முடியாது என்று அவர்களுக்கு தெரியும். பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியது போல வெற்றிக்கான ஒரு மேடை அமைக்கப்பட்டால் மட்டுமே போட்டிகளை வெல்வது சாத்தியமாகும்.

இதையும் படிங்க:பண்ட் விக்கெட் எடுத்துட்டு.. ட்ராவிஸ் ஹெட் அப்படி செய்ய காரணம் இந்த விஷயம்தான் – கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

மேலும் தேநீர் இடைவெளிக்குப் பிறகு ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த போது ஆஸ்திரேலியா அணி அங்கு தலைநிமிர்ந்தது. அந்த தருணத்தில் அந்த ஒரு விக்கெட் தான் அவர்கள் மிக முக்கியமாக எதிர்பார்த்தனர். அது சரியாக அமைந்ததும் போட்டியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாற்றி அமைத்தனர்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். தற்போது ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கும் நிலையில் இந்திய அணி அடுத்ததாக நடைபெற உள்ள சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -