531 டார்கெட்டுக்கு 457 ரன்.. 5வது நாளில் நியூஸியை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. சாதனை வெற்றி தவறியது

0
309
Hope

நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டி, ஐந்தாவது நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக மாறி டிராவில் முடிவடைந்து இருக்கிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று படிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் தற்போது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

சுருக்கமான முதல் இன்னிங்ஸ்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் 52 ரன் மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 231 எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் சந்தர்பால் இருவர் மட்டுமே தாக்கு பிடித்து அரைசதம் அடித்தார்கள். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டப்பி ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் வேற லெவல் பேட்டிங்

நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சொந்த மண்ணில் பேட்டிங்கில் அசத்தியது. கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டாப் லாதம் 250 பந்துகளில் 145 ரன்கள், அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 186 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார்கள். நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 531 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மெகா இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் இணைந்து 382 பந்துகளில் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 234 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : 2027 WCக்கு பிறகு.. ஜடேஜாவுக்கு சரியான மாற்றுவீரர் அவர்தான்.. தயவு செஞ்சு அவரை வளர்த்து விடுங்க – ராபின் உத்தப்பா கோரிக்கை

இதற்கு அடுத்து ஜஸ்டின் கிரீவ்ஸ் உடன் கெமார் ரோச் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியில் சதத்தை தாண்டி ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். இறுதியாக ஐந்தாவது நாள் முடிவில் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டம் இழக்காமல் இரட்டை சதம் அடித்து 388 பந்துகளில் 202 ரன்கள், கெமார் ரோச் மிகப் பொறுமையாக விளையாடி 233 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 58 எடுத்தார்கள். இந்த ஜோடி 409 பந்துகள் விளையாடி 180 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்தாவது நாளின் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது. இதனால் போட்டி டிரா ஆகியது. 74 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர மெகா வெற்றி தவறியது!

- Advertisement -