உலக கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டி20.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்.?. தொடங்கும் நேரம்.. முழு விபரம்

வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த நிலையில் நாளை முதல் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இதன் போட்டிகள் தொடங்கும் நேரம், ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் டி20 தொடர்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் வங்கதேசம் ஒரு வெற்றி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றி என டெஸ்ட் தொடர் சமனில் முடிந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே அதற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

ரோமன் போவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அனுபவம் மற்றும் இளமை என சரியான விகிதத்தில் அமைந்திருக்கிறது. மேலும் அந்த அணிக்கு பூரான், ரொமாரியா ஷெப்பர்ட், பிரண்டண் கிங் ஆகியோர் முக்கிய தூண்களாக உள்ளனர். மேலும் வங்கதேச அணி லிட்டன் தாஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. மேலும் வங்கதேச அணியிலும் மெகதி ஹாசன் மிராஜ், சௌமியா சர்க்கார், டஸ்கின் அகமது போன்ற சிறந்த வீரர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்தியாவில் போட்டிகளை எப்படி பார்க்கலாம்

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நாளை காலை 5:30 மணிக்கு கிங்ஸ்டவுனில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி அதே நேரப்படி வருகிற 18-ஆம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி 20ம் தேதி அதே நேரத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த மூன்று போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:73 ரன்.. 208 ஸ்ட்ரைக் ரேட்.. ஜெமிமா மந்தனா அபார ஆட்டம்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

இந்த போட்டித் தொடரை பொறுத்தவரை இந்தியாவில் எந்த சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாத நிலையில் ஆன்லைனில் ஜியோ சினிமா ஆப் மூலமாக ரசிகர்கள் இந்த போட்டிகளை கண்டுகளிக்கலாம். டி20 தொடரை பொருத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போதுமே வலுவான அணியாக இருக்கும் நிலையில் அதனை வங்கதேச ஆணி சமாளித்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts