இந்தியா நியூசி.. முதல் நாள் ஆட்டம் ரத்து.. வடிகால் வசதி இருந்தும் திடீர் முடிவு ஏன்? – முழு தகவல்கள்

0
396
Virat

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி துவங்க இருந்த சூழலில் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

சின்னசாமி மைதானத்தின் சிறந்த வசதி

இந்தியாவில் சிறந்த வடிகால் அமைப்பு முறை கொண்ட கிரிக்கெட் மைதானமாக பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில், மைதானத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதுடன், அவுட் ஃபீல்டையும் உலர வைத்து போட்டியை நடத்தும் அளவுக்கு வசதிகள் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் மழை நிற்கவும் மைதானத்தில் மூடப்பட்டிருந்த தார்பாய்கள் அகற்றப்பட்டது. மேலும் கள நடுவர்கள் மைதானத்திற்கு உள்ளே வந்தார்கள். மைதான பராமரிப்பாளர்களும் உள்ளே வந்தார்கள். எனவே இன்று ஒரு செஷன் போட்டி நடப்பது உறுதி என்று கூறப்பட்டது.

- Advertisement -

சதி செய்த மழை

இப்படியான நிலையில் அவுட் ஃபீல்டில் ஈரப்பதம் ஒரு அளவுக்கு தென்பட்டது. எனவே 20 ஓவராவது வீசப்படும் அளவுக்கு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்னொரு புறத்தில் வெளிச்சம் மிகவும் குறைந்து கொண்டே வந்தது. இது ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : ரோகித் சர்மா இப்ப செய்யறதுல எனக்கு திருப்தி கிடையாது.. அவருக்கு அந்த பசி இருக்கணும் – தினேஷ் கார்த்திக் கருத்து

இதையெல்லாம் தாண்டியும் போட்டி நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த சூழலில், மீண்டும் சிறிய அளவில் ஆரம்பித்த மழை, தற்போது ஓரளவுக்கு பெரிய மழையாகவே பெய்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைய நாள் ஆட்டத்தை நடுவர்கள் ரத்து செய்து அறிவித்தார்கள். மற்ற நான்கு நாட்களுக்கும் மழை அபாயம் இருந்தாலும் கூட, இன்று இரவு மழை வராவிட்டால் காலை போட்டி 9.15 மணிக்கு முன்கூட்டியே துவங்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -