ரோகித் சர்மா இப்ப செய்யறதுல எனக்கு திருப்தி கிடையாது.. அவருக்கு அந்த பசி இருக்கணும் – தினேஷ் கார்த்திக் கருத்து

0
53
Dinesh

தற்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிகள் பின்பற்றி வரும் அணுகுமுறையில் தான் திருப்தி அடையவில்லை என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் துவக்க ஆட்டக்காரராக அதிரடியான துவக்கத்தை தருவதை நோக்கமாக கொண்டு இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த அணுகுமுறையில் வரும் ரன்கள் தனக்கு போதாது என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முடிவு

ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணி இடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி அப்பொழுது டி20 கிரிக்கெட்டிலும் மெதுவாக ஆரம்பித்து விக்கெட்டை வைத்து அதிரடியாக விளையாடும் டெம்ப்ளேட்டை கொண்டு இருந்தது.

மாறிவரும் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பழைய டெம்ப்ளேட் காரணமாகவே தோல்வி அடைந்ததை இந்திய கேப்டன் ரோகித் சர்மா உணர்ந்தார். இதன் காரணமாக இனி பேட்டிங் யூனிட்டில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இருக்கும் எல்லோருமே அதிரடியாக விளையாடுவது என திட்டத்தை மாற்றினார். இதைத் தானே துவக்க வீரராக வந்து தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

எனக்கு பழைய ரோகித் சர்மா வேண்டும்

ரோகித் சர்மா அணுகுமுறை குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நான் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன் ரோகித் சர்மா தன்னுடைய ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை மாற்றிக்கொள்ள வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் அவர் பெரிய சதம் அடிப்பது மேலும் இரட்டை சதம் அடிப்பது என அதற்கான திறமையைப் பெற்ற ஒரு பெரிய வீரர். எனவே அப்படியான ரன்கள் அவரிடம் இருந்து எனக்கு வேண்டும். மீண்டும் சொல்கிறேன் அவர் ஆக்ரோஷமாகவே விளையாடட்டும்”

இதையும் படிங்க : இந்திய அணியை பற்றி பேச.. எங்க பாகிஸ்தான் டீம்ல தடை விதிச்சிருக்காங்க.. காரணம் இதான் – முகமது ஹாரிஸ் பேச்சு

“எனவே அந்த பெரிய ரன்களை பெறுவதற்கான பசி ரோகித் சர்மாவுக்கு இருக்க வேண்டும். அதற்கான தகுதியும் திறமையும் ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது. அவர் அந்த முறையில் வெளியேறி ஆட ஆரம்பித்தால் ஆகாது மிக அற்புதமான ஒன்றாக இருக்கும். அவர் விளையாடுவதை வீட்டில் இருந்தோ அல்லது இப்படி கமெண்ட்ரி பாக்ஸில் இருந்தோ பார்த்து ரசிக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவர் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -