ரோஹித்தைப் பார்க்க போட்டியின் போது அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரை சிறையில் அடைத்த காவல்துறை

0
87
Fan arrested for illegal entry

நேற்று நடந்த முடிந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தோல்வி பெற்றன. நேற்று இரவு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சேஸ் உட்பட 68* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் மனோஜ் 147 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 66* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மைதானத்திற்குள் திடீரென நுழைந்த ரசிகர்

நேற்று போட்டி நடந்து கொண்டிருக்கையில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென அனைத்து கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்துவிட்டார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை நெருங்கி பார்க்க முயற்சித்து, அனைத்து கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்தார்.

பிசிசிஐ விதிமுறையின்படி மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் யாரும் பாதுகாப்பு விதிமுறையை மீறி மைதானத்திற்குள் நுழைய கூடாது. நேற்று ரசிகர் ஒருவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அவ்வாறு நடந்தால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ரசிகர் கைது செய்யப்பட்ட விவரம் தற்போது அதிகாரபூர்வமாக வெளியானது.

- Advertisement -

இந்த சம்பவத்தை பார்த்தாவது இனி ரசிகர்கள் யாரும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்களை பார்க்க முயற்சிக்கும் விதத்தில் கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழைய மாட்டார்கள் என்று நம்புவோம்.