இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்பொழுது இதற்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்திய ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடருக்கும் அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
நீக்கப்பட்ட 4 முக்கிய வீரர்கள்
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வை வாபஸ் பெற்றுக் கொண்டு மீண்டும் வந்து பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். இவர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி இரண்டு அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை.
இத்துடன் இரண்டு அணிகளிலுமே லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆதில் ரசித் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். அத்துடன் காயத்தில் இருந்து திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு அணிகளிலும் தொடர்கிறார். மேலும் இந்த இரண்டு அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாகவும் தொடர்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகள்
இங்கிலாந்து ஒருநாள் அணி
ஜோஸ் பட்லர்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
கஸ் அட்கின்சன்
ஜேக்கப் பெத்தேல்
ஹாரி புரூக்
பிரைடன் கார்ஸ்
பென் டக்கெட்
ஜேமி ஓவர்டன்
ஜேமி ஸ்மித்
லியாம் லிவிங்ஸ்டோன்
அடில் ரஷித்
ஜோ ரூட்
சாகிப் மஹ்மூத்
பில் சால்ட்
மார்க் வுட்
இங்கிலாந்து டி20 அணி
ஜோஸ் பட்லர்
ரெஹான் அகமது
ஜோஃப்ரா ஆர்ச்சர்
கஸ் அட்கின்சன்
ஜேக்கப் பெத்தேல்
ஹாரி புரூக்
பிரைடன் கார்ஸ்
பென் டக்கெட்
ஜேமி ஓவர்டன்
ஜேமி ஸ்மித்
லியாம் லிவிங்ஸ்டோன்
அடில் ரஷித்
சாகிப் மஹ்மூத்
பில் சால்ட்
மார்க் வுட்
இதையும் படிங்க :
இங்கிலாந்து அணி ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய தொடருக்கு அணியை அறிவித்தவுடன், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சாம்பியன் டிராபி தொடருக்கான அணியையும் உறுதி செய்து விட்டது. இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தவறவிட்டதை பாகிஸ்தானில் வைத்து வெல்வதற்கு தனித்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளது!






