தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று இருக்கும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்காலிகமாக சமநிலையில் இருக்கிறது. தொடரை முடிவு செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாளை நடைபெற இருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்
நாளை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும், இதைத்தொடர்ந்து நவம்பர் 10, 11, 15, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக விளையாடாத கேப்டன் ஜோஸ் பட்லர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு திரும்புகிறார். மேலும் காயத்திலிருந்து திரும்பி வருவதால் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார். பில் சால்ட் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆறு இளம் வீரர்கள்
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி எதிர் பார்த்த அளவுக்கு சரியாக விளையாடாததால் சீனியர் வீரர்கள் சிலர் வெளியேற்றப்பட்டார்கள். அடுத்து 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை மனதில் வைத்து ஜேக்கப் பெத்தேல், டான் மவுஸ்லி, ஜாபர் ஜோகான், ஜேமி ஓவர்டன், ஷகிப் மக்மூத் மற்றும் ஜான் டர்னர் என 6 இளம் வீரர்கள் டி20 அணிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் நடப்பு சாம்பியன் ஆக இருந்து கடைசியாக நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பைகளிலும் தோல்வி அடைந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர்களுடைய உயரத்திலிருந்து சரிந்து இருப்பதால் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சவுத் ஆப்பிரிக்கா டி20.. மாஸான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. புதிய ஆல் ரவுண்டர்.. முக்கிய மாற்றங்கள்
இங்கிலாந்து டி20 அணி : ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாபர் சோஹன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்.