இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்காக சர்வதேச விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர் ஒருவருக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அதிரடியாக தடை விதித்திருக்கிறது. அந்த வீரர் யார் என்பது குறித்து பார்ப்போம்.
இங்கிலாந்து அணியின் 28 வயதான வலது கை வேகப்பந்துவீச்சாளர் பிரைடலன் கார்ஸ். இவர் இங்கிலாந்து அணிக்காக தற்பொழுது கூட விளையாடிக் கொண்டு வரக்கூடியவர். இவர் மொத்தம் 14 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று இருக்கிறார்.
இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதாவது இவர் சட்டத்திற்குப் புறம்பான கிரிக்கெட் பந்தயங்களில் ஈடுபட்டு இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவருக்கு 13 வாரங்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட கூடாது என தடை விதித்திருக்கிறது.
மேலும் இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் இவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கியிருக்கிறது.
மேலும் இவர் தன்னுடைய தவறை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்காக தன்னை நல்ல முறையில் வழி நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் டர்காம் கிரிக்கெட் அமைப்புக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அடுத்து கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு வரும்பொழுது ரசிகர்களின் ஆதரவை பெரும் விதமாக சிறப்பாக செயல்படுவதற்கு உழைக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நம்ம டீம் ஆஸி கிடையாது.. எனவே டிராவிட் இந்த தப்பை மட்டும் செய்யக்கூடாது – இர்பான் பதான் கோரிக்கை
மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கடைசி ஐந்து வருடங்களில் இருந்து எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும், நல்ல முறையில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திவிளையாடி வந்திருக்கிறார் என்றும், எனவே அதையும் கவனத்தில் கொண்டே இவருக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்தின் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருந்த இவருக்கு வாய்ப்பு தாமதமாகும் என்று தெரிகிறது.