நம்ம டீம் ஆஸி கிடையாது.. எனவே டிராவிட் இந்த தப்பை மட்டும் செய்யக்கூடாது – இர்பான் பதான் கோரிக்கை

0
121
Pathan

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பணிக்காலம், நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை உடன் முடிவுக்கு வருகிறது. எனவே அவர் வெற்றிகரமாக முடித்துக் கொள்ள விரும்புவார். இது குறித்து இர்பான் பதான் முக்கியமான ஒரு ஆலோசனையை முன் வைத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் பெரிய சூறாவளியை கிளப்பிய வெளிநாட்டு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய லெஜெண்ட் சேப்பல் இருக்கிறார். அவர் கங்குலி கேப்டனாக இருந்த பொழுது பயிற்சி ஆளாக வந்தார். மேலும் இந்திய கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய வழியில் மாற்றி அமைக்க முயற்சி செய்தார்.

- Advertisement -

இந்திய அணியில் வீரர்கள் எல்லோரையும் ஒரே அளவில் மதிக்குமாறும், யாருக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடையாது என்றும் கொண்டுவர பெரிய முயற்சி செய்தார். யாராக இருந்தாலும் சரியாக விளையாடாவிட்டால் வெளியில் செல்ல வேண்டும் என்பது அவருடைய பாணி. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அது வேலை செய்யவில்லை.

இந்த நிலையில் இதை வைத்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவில் பிரபல வீரர்கள் என்கின்ற கலாச்சாரம் கிடையாது. ஆனால் அது இந்தியாவில் உள்ளது. ஆனால் நான் இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் இந்தியர்கள் நம்முடைய விருப்பங்கள் மற்றும் நெறிமுறைகள் வேறானது. கிரேக் சேப்பல் வந்த பொழுதும் நான் இதையேதான் சொன்னேன். அவரது நோக்கங்கள் தூய்மையானவை.

அவர் இந்திய கிரிக்கெட் உயர வேண்டும் என்று விரும்பினார். மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருடைய ஆஸ்திரேலிய செயல்முறை இங்கு வேலை செய்யவில்லை. நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். எனவே நான் அவரிடம் பேசும் பொழுது இந்த முறை இங்கு வேலை செய்யாது என்று கூறினேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. மஞ்ச்ரேக்கரின் மாஸ் இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய வீரருக்கு இடமில்லை

ஹர்திக் பாண்டியாவுக்கு ஐபிஎல் தொடர் சரியாக செல்லவில்லை. ஆனாலும் கூட ஐபிஎல் தொடரில் என்ன நடந்தது என்பது குறித்து ராகுல் டிராவிட் ஹர்திக் பாண்டியாவிடம் பேசவே கூடாது. இந்திய அணிக்கு அவரிடம் இருந்து என்ன தேவை என்பது குறித்து மட்டும்தான் பேச வேண்டும். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணுகுமுறை சரிவராது” என்று கூறியிருக்கிறார்.