“இந்தியாவுக்கு எதிரா சில நாள்தான் இருக்கு.. ஆனா நாங்க செம்மையா இருக்கோம்!” – பாட் கம்மின்ஸ் சவால் பேச்சு!

0
504
Cummins

அக்டோபர் ஐந்தாம் தேதி நாளை மறுநாள் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது!

தற்பொழுது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சி போட்டியோடு, உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் முடிவுக்கு வருகின்றன.

- Advertisement -

உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவே முதல் போட்டி.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் காயத்திலிருந்து திரும்பிய வீரர்கள், மற்றும் அணியில் இருந்த வீரர்கள் என எல்லோரும் நல்ல ஃபார்மிலும் உடல் தகுதியிலும் இருக்கிறார்கள். தற்போது யாரை சேர்ப்பது விலக்குவது, என்பதுதான் குழப்பமான விஷயமாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியை எடுத்துக் கொண்டால், அந்த அணி எப்படி இருந்தாலும் உலகக் கோப்பை என்று வரும் பொழுது வேறு மாதிரியாக வரும். தற்பொழுது அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் என எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அவர்கள் அணியில் ஒரே ஒரு பிரதான சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் அவர்களின் பேட்டிங் நீளம் பெரிதாக இருக்கிறது.

இன்று தனது கடைசிப் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடிய போட்டியில், மேக்ஸ்வெல் உடன் சேர்த்து பகுதி நேர பந்துவீச்சாளர்களுக்கு மொத்தம் 23 ஓவர்கள் தந்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியின் முடிவுக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் “உலகக் கோப்பையில் எங்கள் முதல் ஆட்டத்திற்கு இன்னும் சில நாட்களில் இருக்கிறது. நாங்கள் மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறோம். மார்ஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

நடுவில் கிட்டத்தட்ட அனைவருமே சிறப்பாக செயல்பட்டார்கள். இறுதிக்கட்டத்தில் கிரீன் மற்றும் இங்கிலீஷ் நல்லவிதத்தில் இருந்தார்கள். நாங்கள் சென்னை வந்ததும் எங்களுக்கு இரண்டு பயிற்சி அமர்வுகள் கிடைக்கும்!” என்று கூறியிருக்கிறார்!