இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சில முக்கிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. தென் ஆப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் மோத போவது இந்தியாவா அல்லது ஆஸ்திரேலியாவா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 66.67 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணி 52.78 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா?
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிட்னியில் வெற்றி பெற்றதாக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி சிட்னியில் தோல்வி அடைந்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும்.
இதையும் படிங்க : இவரோட விக்கெட் தான் எங்களுக்கு திருப்பு முனை.. அதுக்கு ஐடியா தந்ததுக்கு அவருக்கு நன்றி – பேட் கம்மின்ஸ் பேச்சு
அதே சமயத்தில் இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முழுமையாக தோல்வி அடையவும் வேண்டும். இந்திய அணி ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியையும் தோற்க வேண்டும். இது நடந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.






