இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்த அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று நியூசிலாந்துக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது.
நியூசிலாந்துக்கு ஏற்பட்ட பரிதாபம்
இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. மேலும் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் இந்திய அணிக்கு நெருக்கடியையும் உருவாக்கியது.
இப்படியான நிலையில் நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வென்று இருந்தால், இந்திய அணிக்கு அது பெரிய தலைவலியாக மாறி இருக்கும். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இலக்கை அணிக்கு எதிராக தோற்று, புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு போட்டியாக மாறிய இலங்கை அணி
இந்த நிலையில் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்ற காரணத்தினால், 55.56 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியாக தற்பொழுது மாறி இருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 62.50 என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றால், ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் கீழே இறங்கும். அதே சமயத்தில் இலங்கை அடுத்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடினால், ஆஸ்திரேலியாவை தாண்டும். தற்போது திடீரென இந்திய அணிக்கு இருந்த நெருக்கடி ஆஸ்திரேலியா அணியின் பக்கமாக மாறி இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
இந்தியா – 71.67
ஆஸ்திரேலியா – 62.50
இலங்கை – 55.56
இங்கிலாந்து – 42.19
பங்களாதேஷ் – 39.29
சவுத் ஆப்பிரிக்கா – 38.89
நியூசிலாந்து – 37.50
பாகிஸ்தான் – 19.05
வெஸ்ட் இண்டீஸ் – 18.52