ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு இந்தியாவை விட எங்களுக்கே அதிகம்.. காரணம் இதுதான் – மழுப்பாமல் பதில் சொன்ன பாபர் அசாம்!

0
1335
Babar

நாளை உலகில் குறைந்தபட்சம் 50 கோடி மக்களாவது மழை வரவே கூடாது என்று வேண்டிக் கொண்டு இருப்பார்கள். குறிப்பாக இலங்கையில் மழை வரவே கூடாது என்று வேண்டிக் கொண்டு இருப்பார்கள்!

காரணம், நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளும் ஆசியக் கோப்பையில் இந்த முறை மோதிக்கொண்ட முதல் சுற்று முதல் போட்டியில், மழையும் கூட சேர்ந்து விளையாடி, போட்டியை வெற்றி தோல்வி இல்லாமல் செய்தது, ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் நாளைய போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் 90% இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகக் கூடாது என்று, இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவித்து, மற்ற நாடுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஒருவேளை நாளையும் மழை வந்து, நாளை மறுநாளும் மழை வந்தால், இந்தியா பாகிஸ்தான் போட்டி முழுவதுமாக நடைபெறாமல் போனால், பல மில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படும். அதே சமயத்தில் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்திற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளாகும் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் சுற்றில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களிடம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தார்கள். இதற்கு திருப்பி பதிலடி தர அவர்கள் காத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. எனவே போட்டி குறித்து ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

நடைபெற இருக்கும் போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ” பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நாங்கள் தொடர்ந்து விளையாடி வரும் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் பார்த்தால், நாங்கள் இந்தியாவை விட சிறிது வெற்றிக்கான வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறோம் என்று கூறலாம்.

கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம். முதலில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்து லங்கா பிரீமியர் லீக் அதற்கடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர என இலங்கையில் தொடர்ந்து விளையாடுகிறோம். இதனால் எங்களுக்கு இந்தியாவை விட வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம்.

நாங்கள் எப்பொழுதும் எவ்வளவு பயணம் செய்ய வேண்டும்? எத்தனை போட்டிகளில் விளையாட வேண்டும்? என்பது குறித்து மிகவும் தெளிவாகவே இருக்கிறோம். எனவே நாங்கள் இதை வைத்து எங்கள் வீரர்களை மிகச் சரியாகப் பார்த்துக் கொள்வது முக்கியம். நாங்கள் எல்லாவற்றையும் மிக நல்லபடியாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறோம்!” என்று கூறி இருக்கிறார்!