இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் கட்டளையை ஏற்று வீரர்களுக்கான சிறப்பு சலுகையை நிறுத்தியுள்ளது.
இந்தியா இங்கிலாந்து முதல் டி20 போட்டி
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து பிசிசிஐ வீரர்களுக்கு 10 புள்ளிகள் ஆணை கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இந்திய மூத்த மற்றும் ஜூனியர் வீரர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அணிக்கென்று ஒதுக்கப்பட்ட பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், மேலும் வீரர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தங்குவதற்கு அனுமதி உண்டு.
அதுமட்டுமல்லாமல் வீரர்களுக்கு தனிப்பட்ட சூட்டிங் போன்றவைகளுக்கு அனுமதி மறுப்பு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்ட நிலையில் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று விவாதிக்கப்பட்டிருந்தது. இந்திய அணிக்கு அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாகவே இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
வீரர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இல்லை
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த மூன்று மைதானத்திற்கும் 10 புள்ளிகள் ஆணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி உள்ளது. இதன்படி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் தனித்தனியாக எந்த வீரருக்கும் வாகனங்களை ஏற்பாடு செய்யவில்லை என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஃபார்ம்லயே இல்லாத 3 பேர்.. இப்போ அவரும் இல்ல.. சாம்பியன்ஸ் ட்ராஃபில மாட்டிக்கிட்டாங்க – சுரேஷ் ரெய்னா பேட்டி
இது குறித்து வெளிவந்துள்ள அறிக்கையில் “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 10 புள்ளிகள் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பெங்கால் கிரிக்கெட் சங்கம் வீரர்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்திய அணிக்கு ஒரு குழு பேருந்து மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களும் போட்டிகள் மற்றும் பயிற்சி அமர்வுகளுக்கு அணியுடன் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்ற வேண்டும்” என்று பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் சினேகா சிஷ் கங்குலி கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.






