பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.
சமீபத்தில் இதில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணித்தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரைனா சில முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்
இந்திய அணியில் குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாறி வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் சீனியர் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி தொடர்களை இழந்து மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வடிவ கிரிக்கெட் தொடரான சாம்பியன் டிராபி அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
எனவே மோசமான ஃபார்மில் இருக்கும் இவர்கள் முதல் மூன்று வரிசைகளில் களம் இறங்க உள்ளதால் இந்திய அணி வலுவான தொடக்கம் பெறுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருப்பினும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர்கள் என்பதால் இவர்கள் மீது ஓரளவு பிசிசிஐ நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டி20 ஸ்பெசலிஸ்ட் ஆன சூரியகுமார் யாதவை இந்தத் தொடரில் சேர்த்திருக்க வேண்டும் என அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இந்திய அணி இவரை நிச்சயம் மிஸ் செய்யும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இதற்கு முன்பாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் 360 டிகிரி திசையிலும் ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு சிறப்பான வீரர். ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் அவரால் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் எடுக்க முடியும். அவர் தனது வித்தியாசமான பேட்டிங்கின் மூலம் எதிர் அணியை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்.
இதையும் படிங்க:8 ரன்னை தாண்டாத 8 பேர்.. பந்துவீச்சில் கலக்கிய சன்ரைசர்ஸ்.. டர்பன் மோசமான தோல்வி.. எஸ்ஏ டி20 லீக்
சூரியகுமார் யாதவ் சாம்பியன் டிராபி தொடரில் இருந்திருந்தால் அவர் ஒரு முக்கிய வீரராக மாறி இருப்பார். அவர் இப்போது இந்த தொடரில் இருந்து தவறவிடப்படுகிறார். இப்போது இந்தியா பேட்டிங் ஆர்டரின் பொறுப்பு ஃபாமில் இல்லாத முதல் மூன்று பேர் மீது நிச்சயமாக இருக்கும். சூரியகுமார் யாதவ் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வீரராக இருப்பதால் அவரை இந்திய அணி இந்த தொடரில் நிச்சயமாக மிஸ் செய்யும்” என்று கூறியிருக்கிறார். சூரியகுமார் யாதவ் தற்போது டி20 இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






