எங்க இங்கிலாந்து வந்து.. அந்த பாகிஸ்தான் வீரர் செய்யறது அசிங்கமானது.. ஷோ காட்டுற வேலை – ஸ்டூவர்ட் பிராட் கோபம்

0
0

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய பாகிஸ்தான் பேட்டர் இமாம் உல் ஹக், கேமராக்களுக்கு முன்னால் பேட்டிங் பயிற்சி செய்து நாடகமாடுவதாக இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

​லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஃபீல்டிங் செய்தபோது இமாம் உல் ஹக்கிற்கு இடது காலில் காஃப் இன்ஜுரி ஏற்பட்டது. காயம் காரணமாக போட்டியின் எஞ்சிய நாட்களில் அவர் விளையாட மாட்டார் என்று பாகிஸ்தான் மருத்துவக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

- Advertisement -

​இருப்பினும், நான்காம் நாள் ஆட்டத்திற்கு முன்பாக இமாம் உல் ஹக் தனது இடது காலில் டேப் அணிந்துகொண்டு, மைதானத்தின் ஓரத்தில் நோண்டி நோண்டி நடந்தபடியே பேட்டிங் பயிற்சி செய்தார். அணியின் பேட்டிங் வரிசை சரிந்தால் அவர் பேட்டிங் செய்ய வரலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

​இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பேசும்போது “இதெல்லாம் வெறும் ஷோ காட்டும் வேலைதான். மீடியா மற்றும் சக வீரர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்ததால் அவர் இவ்வாறு செய்கிறார். இதை யாருக்கும் தெரியாமல் இண்டோர் ஸ்கூலில் செய்யலாம், இப்படி ஷார்ட்ஸ் மற்றும் டேப் அணிந்துகொண்டு எல்லோருக்கும் முன்னால் நொண்டி நொண்டி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் இந்த சர்ச்சை குறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசும்போது “அவருக்கு உண்மையிலேயே கடுமையான காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து விலகி இருந்தால், மைதானத்தின் வெளியே கேமராக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் வந்து ஏன் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும்? இது வெறும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யப்பட்ட ஒரு செயல்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -