இது அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய இரண்டு நாட்களில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் அணுகுமுறை எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது என பங்களாதேஷ் பயிற்சியாளர் சந்திகா ஹதிருசிங்கா கூறியிருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் வென்று கொடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி தனது முழு விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியை படுதோல்வி அடைய வைத்தது.
கிரிக்கெட் உலகை வியக்க வைத்த வெற்றி
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய இரண்டரை நாட்களுக்கு மேலாக மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு விட்டது. மேலும் அப்பொழுது பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஏறக்குறைய போட்டியின் முடிவு தெரிய 4 இன்னிங்ஸ் மீதி இரண்டரை நாட்களில் விளையாடியாக வேண்டி இருந்தது.
இப்படியான நிலையில்தான் இந்தியா இரண்டு இன்னிங்ஸ் விளையாடியதோடு, பங்களாதேஷ் அணியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்து கடைசி நாளில் பாதி நாள் இருக்கும் பொழுது இரண்டு நாளில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய அணி 34 ஓவரில் 285 ரன் அதிரடியாக குவித்தது அமைந்திருக்கிறது.
இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை
இது குறித்து பங்களாதேஷ் பயிற்சியாளர் கூறும் பொழுது “இந்திய அணி பேட்டிங்கில் வெளிப்படுத்திய இந்த அணுகுமுறையை இதற்கு முன் பார்த்தது கிடையாது. இப்படி ஒரு அணுகுமுறையை எடுத்து விளையாட்டை முடிவுக்கு கொண்டு சென்றதற்கு முழு பெருமையும் ரோஹித் சர்மாவுக்கும் அவருடைய குழுவுக்கும் சென்று சேர வேண்டும்”
இதையும் படிங்க : வங்கதேச டி20.. இடம் கிடைக்காத ருதுராஜ்.. வெளியான மகிழ்ச்சி காரணம்.. கம்பீரின் மாஸ்டர் பிளான்
“இன்னும் மேலே செல்லும் பொழுது சிறந்த தரம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். இந்தக் கட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான பணியாகும்.எனவே எவ்வளவு முன்னேற வேண்டி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.