என் மனைவி சொன்னாங்க.. நாங்க அவங்க இடத்துல பாகிஸ்தான் அணியை தோற்கடிச்சோம் – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி

0
131
Shanto

பங்களாதேஷ் அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கிறது.இந்த சரித்திர வெற்றி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜிமுல் சாந்தோ பேசி இருக்கிறார்.

பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகள் இதுவரை மோதிய 13 போட்டிகளில் 12 போட்டிகளை பாகிஸ்தான் அணி வெல்ல ஒரு போட்டி இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறது.

- Advertisement -

மழையால் மாறிய போட்டி

இந்த போட்டியில் டாஸ் தோற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. மேலும் இந்த போட்டியின் முதல் நாளில் மழையின் காரணமாக 42 ஓவர்கள் மட்டுமே நடந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 448 ரன்களை ஆறு விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்தபோது, பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இன்னிங்ஸ் டிக்ளர் செய்தார். சவுத் அகில் 141 முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தார்கள். வெற்றியை நோக்கி செல்ல இப்படியான டிக்ளேர் முடிவு மழையின் காரணமாக எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக மாறிவிட்டிருந்தது. இதை பயன்படுத்தி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு தொடக்க ஆட்டக்கார சத்மன் இஸ்லாம் 91 மற்றும் மூத்த வீரர் முஸ்கிபியூர் ரஹீம் 191 ரன்கள் என எடுக்க, பங்களாதேஷ் அணியை 565 ரன்கள் குவித்து 117 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வந்த ஐந்தாவது நாளில் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிக்கொண்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருள, பங்களாதேஷ் அணி 30 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பில்லாமல் எடுத்து பார்த்து விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றது.

15 வீரர்களுக்கும் பெருமை

இந்த வெற்றி குறித்து பேசி இருக்கும் பங்களாதேஷ் கேப்டன் கூறும் பொழுது “இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது. நேற்று இரவு என் மனைவியுடன் பேசும்பொழுது இந்த போட்டியை வென்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கள். இன்று அதிர்ஷ்டவசமாக நாங்கள் போட்டியை வென்றிருக்கிறோம். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை ஆனால் கடந்த 10 முதல் 15 நாட்களாக கடுமையாக உழைத்து நம்பிக்கை கொண்டோம்.மேலும் இந்த வெற்றிக்கான பெருமை சாஹிப் முதல் மெகதி ஹசன் வரை எல்லோருக்கும் செல்கிறது.

இதையும் படிங்க : சொந்த மண்ணில் பங்களாதேஷ் கிட்ட தோத்துட்டோம்.. 8 நாள் முன்ன நடந்த இதுதான் காரணம் – பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

நீண்ட நாட்களுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். ஆனால் ஜாகிர் மற்றும் சத்மன் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். மேலும் 15 முதல் 17 வருடங்களாக மூத்தவீரர் முஸ்பிக்யூர் ரஹீம் பங்களாதேஷ் கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். வெப்பம் மிகுந்த சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றியின் பெருமையை நான் அவருக்கு மட்டுமல்ல அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -