சொந்த மண்ணில் பங்களாதேஷ் கிட்ட தோத்துட்டோம்.. 8 நாள் முன்ன நடந்த இதுதான் காரணம் – பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

0
408
Masood

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசியிருக்கிறார்.

இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் பாகிஸ்தான் அணி 12 டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானின் சொந்த மண்ணில் அந்த அணியை முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்கடித்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் ஆடுகளம்

இந்த முறை வழக்கமாக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் அமைக்க கூடாது எனவும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும் எனவும் முயற்சி செய்யப்பட்டு, அதன்படியே ஆடுகளம் அமைத்து பாகிஸ்தானும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

- Advertisement -

இப்படியான நிலையில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. பேட்டிங் செய்ய நான்கு நாட்களுக்கு மிகச் சாதகமான நிலையை கொடுத்தது. ஆனால் ஐந்தாவது நாளில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது. பங்களாதேஷ் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் என்று வந்ததால், பாகிஸ்தான அணியை 146 ரன்னுக்கு சுருட்டி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணம்

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறும்பொழுது “தோல்வி குறித்து ஒருபோதும் சாக்குப் போக்கு சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஆடுகளம் நாங்கள் நினைத்தபடி விளையாடவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் வானிலை எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது. போட்டித் தொடங்குவதற்கு எட்டு, ஒன்பது நாட்களுக்கு முன்பு இங்கு மழை பெய்திருந்தது.நாங்கள் இங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என ஏமாந்து விட்டோம்.

அதே சமயத்தில் பங்களாதேஷ அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் வந்தார்கள். ஆனால் நாங்கள் தவறான கணிப்பை கொண்டிருந்தோம். மேலும் போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக டிக்லர் செய்தோம். ஆனால் டிராவை நோக்கி செல்லும் போட்டியில் ஏதாவது வேடிக்கையாக இப்படி நடக்கலாம். அழுத்தம் திடீரென உருவாகும் பொழுது இப்படி ஆகிறது.

இதையும் படிங்க : 30 ரன் டார்கெட்.. 13 மேட்ச்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி

நாங்கள் அமீர் ஜமால் மற்றும் சஜித் கான் என இரண்டு வீரர்கள் இல்லாமல் விளையாட வேண்டியதாகி விட்டது. சொந்த கண்டிஷனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கு இது எங்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது. கண்டிஷனை கருத்தில் கொண்டு நாங்கள் ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -