பாகிஸ்தான் ODI.. ஆஸி அணி அறிவிப்பு.. கேப்டன் கம்மின்ஸ் ரிட்டன்.. சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன் கடைசி தொடர்

0
1156

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா ஒருநாள் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் திரும்பவும் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக வருகிற நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்று வெற்றி பெற்றது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த வருடம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக விளையாட உள்ள கடைசி ஒரு நாள் தொடர் இதுவாகும். இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் விதமாக தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். கம்மின்ஸ் கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் கடைசியாக விளையாடினார்.

- Advertisement -

அணிக்கு திரும்புகிறார் பேட் கம்மின்ஸ்

அதற்குப் பிறகு வருகிற நவம்பர் மாதம் இந்திய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு தயாராகும் விதமாக வேறு எந்த போட்டியிலும் பங்கு பெறாமல் ஓய்வு பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் மிச்சல் மார்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலக கம்மின்ஸ் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார். மேலும் மார்க்கஸ் ஸ்டானிஸ் மீண்டும் ஒரு நாள் தொடருக்கு திரும்பி இருக்கிறார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறும்போது “சாம்பியன் டிராபி தொடருக்கு முன்னதாக நாங்கள் விளையாட இருக்கும் கடைசி ஒரு நாள் தொடர் இதுவாகும். அணியின் சமநிலையில் கவனம் செலுத்துவதோடு வரவிருக்கும் கோடைகால டெஸ்ட் தொடருக்காக தனி நபர்களை தயார்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக காயத்தால் அவதி பட்டாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற பெற்றோம். பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்த இந்திய வீரர் மேத்யூ ஹைடன் மாதிரி.. வெளிநாட்டுல என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லா தெரியும் – நியூசி ஷேன் பாண்ட் பேட்டி

பாகிஸ்தான் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணி : பாட் கம்மின்ஸ் (கேட்ச்), சீன் அபோட், கூப்பர் கொனொலி, ஜேக் ஃப்ரேசர்- மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸ்டோனிஸ், ஆடம்.

- Advertisement -