இந்த இந்திய வீரர் மேத்யூ ஹைடன் மாதிரி.. வெளிநாட்டுல என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லா தெரியும் – நியூசி ஷேன் பாண்ட் பேட்டி

0
845

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஷேன் பாண்ட் இந்திய அணி வீரர் குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி வரவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபியிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால் அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பெரிய நன்மையாக அமையும். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஹைடனை இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இவர் மேத்யூ ஹேடன் மாதிரியான வீரர்

இது குறித்து அவர் கூறும் போது “ரோஹித் சர்மாவை ஒரு வீரராக எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணி முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் வகை வீரராக பார்க்கிறேன். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் செய்தது போல வெளிநாடுகளில் கடினமான சூழ்நிலைகளிலும் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு வெளியே வந்து விளையாடுகிறார். அவரால் வெளியேறி ரன்களை மிக வேகமாக குவிக்க முடியும். ரிஷப் பண்ட் போன்று அவரால் ஆட்டத்தை மிக எளிதாக மாற்ற முடியும்.

இதையும் படிங்க:179 ரன்.. அசத்திய வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் ஜோடி.. இலங்கை அணி சொந்த மண்ணில் தோல்வி.. முதல் டி20

எதிரணியிடமிருந்து ஆட்டத்தை மிக விரைவாக எடுத்துக்க கூடியவர். சில சூழ்நிலைகளில் பந்து கடினமாக இருக்கும் போது இயற்கையாகவே ஷாட்களை உருவாக்கும் விதம் ரோகித் சர்மாவுக்கு நன்றாக பொருந்தும். அவர் வேகமாக ஸ்கோர் செய்து ரன்களை குவித்தால் அது எதிரணிக்கு நிச்சயம் அழுத்தம் தரக்கூடியதாக அமையும்” என்று கூறியிருக்கிறார். இவரது இந்த கருத்து ரோகித் சர்மா மீதும் இந்திய அணியும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்று கூறலாம்

- Advertisement -