ஆப்கானிஸ்தான அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் வைத்து விளையாடுகிறது. இதற்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் நெகிழ்ச்சியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் முறையாக ஆசியா தாண்டிய அணிவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு முக்கியமான டெஸ்ட் போட்டியாக மாறுகிறது.
இந்தியாவின் உதவி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு இந்தியா பின்னணியில் இருந்து நிறைய உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் ஏதும் இல்லாததால் இந்தியா அவர்களுடைய போட்டியை இந்திய மண்ணில் நடத்த அனுமதிக்கிறது.
இந்த நிலையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கு டிம் சவுதி தலைமை தாங்கும் நியூசிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் மிக முக்கிய வீரரான ரஷித் கான் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் வரவேற்பு
தங்களுக்கு எதிராக விளையாட வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, தங்கள் நாட்டின் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இல்லாததால் இந்தியாவில் வைத்து விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி சிறந்த விருந்தோம்பலை வெளிப்படுத்தும் விதமாக நியூசிலாந்து தங்கப் போகும் ஹோட்டலுக்கு முன்பாக அவர்களுக்கு வரவேற்பு பதாகைகளை வைத்து அசத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : அர்ஷ்தீப் மயங்க் யாதவ் இல்லை.. ரோகித் இந்த 28 வயசு பையனை ஆஸி கூட்டிட்டு போங்க – இந்திய முன்னாள் பவுலிங் கோச் அட்வைஸ்
நியூசிலாந்து அணியை வரவிருக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் வைத்திருக்கும் பதாகைகளில் “நியூசிலாந்து அணிக்கு அன்பான ஆப்கானிஸ்தான் வரவேற்பு!” “வெல்கம் பிளாக் கேப்ஸ்” என்று எழுதப்பட்டு இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இதற்கான வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகத்தின் இந்த செயல் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
Welcome @BlackCaps
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 5, 2024
Video: The New Zealand team has arrived at the hotel in Greater Noida, India, for the one-off Test match against Afghanistan's national team.#AfghanAtalan | #AFGvNZ | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/UlQApG5UXP