இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னால் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் வெற்றி பெற்று இருக்கின்ற காரணத்தினால் இந்த முறை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் வெற்றி பெறுவதற்கு மிகக் கடுமையாக முயற்சி செய்யும். மேலும் இந்த தொடரை நோக்கி அவர்கள் எப்போதோ தயாராக ஆரம்பித்து விட்டார்கள்.
பவுன்ஸ் ஆடுகளங்கள் – கூக்கபுரா பந்து
ஆஸ்திரேலியா கண்டிஷன் எப்பொழுதும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்கள் இருக்கும். மேலும் சில நேரங்களில் பெர்த் போன்ற மைதானத்தில் வேகமும் மிக அதிகமாக இருக்கும். சுழல் பாதுகாத்துக்கான சாதகத்தை நான்காவது நாள் முடிவில் ஐந்தாவது நாளில் பார்க்க முடியும்.
பொதுவாக வேகப்பந்துவீச்சை வைத்து மட்டுமே ஆட்டத்தை வெல்ல முடியும். இதன் காரணமாக மூன்று முதல் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மார்ஸ் மற்றும் கிரீன் என இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருப்பது அவர்களுக்கு சாதகம். ஆனால் இந்திய அணிக்கு அப்படியான ஆல் ரவுண்டர் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது.
மூன்றாவது பவுலர் இவர்தான்
இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் பவுலிங் கோச் பராஸ் மஹாம்ப்ரே கூறும் பொழுது “வெளிப்படையாக ஆஸ்திரேலியாவில் கூக்கபுரா பந்து வித்தியாசமானது. பந்து புதியதாக இருக்கும் பொழுது 35 ஓவர்களில் விக்கெட் கைப்பற்ற வேண்டியது அவசியம். இதை உங்களுக்கு யார் செய்து தரப் போகிறார்கள் என்பது முக்கியம். அதற்கு என்ன மாதிரியான திறன்கள் தேவை என்று பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் பவுன்ஸ் சிறப்பாக இருக்கும். எனவே நல்ல உயரமும் வேகமும் கொண்ட பிரசித் கிருஷ்ணா அங்கு எப்படி இருப்பார் என்று நான் பார்க்க விரும்புகிறேன். அவர் துலீப் டிராபியில் நன்றாக விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : எத்தனை பேர் இருந்தாலும்.. எனக்கு புடிச்ச பவுலர் இவர்தான் – வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் அம்ப்ரோஸ் பேட்டி
மேலும் உங்களிடம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டும். மேலும் 30, 35 ஓவர்களில் ஆடுகளம் தட்டையாக இருக்கும். அப்போது சிறப்பான ஏதாவது ஒன்றை செய்து வைக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு உங்களிடம் வித்தியாசமான ஒரு பந்துவீச்சாளர் இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறியிருக்கிறார்.