கேஎல்.ராகுலுக்கு ஐபிஎல் லக்னோ நிர்வாகம் மீண்டும் செஞ்ச மோசமான காரியம்.. முன்னாள் வீரர் எதிர்ப்பு – என்ன நடந்தது?

0
8
Rahul

இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பற்றிய ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் இந்திய போட்டோ ஆல்பம் தற்போது சர்ச்சையாக மாறி வருகிறது.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இளம் இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்தது. மூத்த வீரர்கள் இல்லாததால் இளம் இந்திய அணி தொடரை இழந்து விடும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அனைவரும் அணியாக சேர்ந்து விளையாடி சாதித்திருக்கிறார்கள்.

- Advertisement -

கேஎல்.ராகுல் ஐபிஎல் பிரச்சனை

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு விளையாடிய கேஎல் ராகுல் ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். இரண்டு முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அந்த அணி மூன்றாவது முறை முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இதன் காரணமாக அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் மீது அதிருப்தியை மைதானத்திலேயே வெளிப்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் பல கண்டனங்களை உருவாக்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டு கேஎல்.ராகுல் டெல்லி அணிக்கு மாறினார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு கேப்டனாக மாறினார்.

- Advertisement -

லக்னோ அணியின் சர்ச்சை

இப்படியான நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதித்த இந்திய அணியை பாராட்டும் விதமாக லக்னோ அணி வெளியிட்டிருக்கும் போட்டோ ஆல்பத்தில் கேஎல்.ராகுல் பெயர் இல்லை. தொடக்க வீரராக விளையாடுவதற்கு கடினமான இங்கிலாந்து சூழ்நிலையில் கேஎல்.ராகுல் இரண்டு அரை சதங்கள் உடன் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனாலும் அவருடைய போட்டோவை லக்னோ அணி நிர்வாகம் ஆல்பத்தில் வெளியிடவில்லை.

இதையும் படிங்க : ஸ்டோக்ஸ் இடத்துல நான் இருந்திருந்தா இதான் நிலைமை.. இந்தியா டிரா பண்ணல ஜெயிச்சிடுச்சு – மைக்கேல் கிளார்க் பாராட்டு

இதுகுறித்து கர்நாடகா மற்றும் இந்திய அணியும் முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறும் பொழுது “இந்த விஷயம் சங்கடமாக மாறி வருகிறது. இங்கிலாந்து சூழ்நிலையில் புதிய பந்தை சந்தித்து விளையாடி 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த கேஎல்.ராகுல் போட்டோ ஆல்பத்தில் இல்லாதது சரியானது இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -