இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தால் கூட அதை பெரிய வெற்றியாக கருத வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.
இந்த முறை இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு புதிய இளம் கேப்டனா கில் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் இந்திய டெஸ்ட் அணி இளம் அணியாக இருந்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீர் ஓய்வை அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் தான் இந்திய அணி சமன் செய்து அசத்தியிருக்கிறது.
ஸ்டோக்ஸ் இடத்தில் நான் இருந்தால்
இந்த நிலையில் இந்திய அணி செயல்பட்ட விதம் குறித்தும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக்ஸ் தங்களது சொந்த மண்ணில் தொடரை வெல்ல முடியாமல் போனது குறித்தும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய அணியை பாராட்டி பேசி இருக்கிறார்.
இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறும்பொழுது ” இந்த இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டு இரண்டு என சமன் செய்து கொண்டிருக்கிறது. நான் இங்கிலாந்து கேப்டனாக இருந்திருந்தால் இந்த முடிவு எனக்கு நிச்சயம் ஏமாற்றமாகவே இருந்திருக்கும். நான் எப்பொழுதும் என்னுடைய சொந்த இடத்தில் வெற்றி பெறவே விரும்புகிறேன். மேலும் தொடருக்குள் வெற்றி பெறுவோம் என்றே வந்திருப்பார்கள்”
இந்தியா வெற்றியாக கருத வேண்டும்
“நான் இந்தியாவை எளிதாக நினைக்கவில்லை. அவர்கள் இந்த தொடரில் சாதித்து இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியா தொடரை இழந்து இருந்தால் கூட மக்கள் அதை புரிந்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கேப்டன் மற்றும் அணி இளமையாக அனுபவம் இல்லாமல் இருக்கிறது. மேலும் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். எனவே தோல்வி அடைந்திருந்தாலும் பெரிய விஷயம் இல்லை”
இதையும் படிங்க : 280 ரன்.. பாபர் ரிஸ்வான் கெத்து கம்பேக்.. மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி
“மேலும் இந்திய அணியில் இருக்கும் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் பும்ரா ஐந்தில் மூன்று போட்டி மட்டுமே விளையாடினார். இந்த நிலையில் இந்தத் தொடரை வெல்ல முடியும் என்றே இங்கிலாந்து அணி வந்திருக்கும். ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டுக்கு இரண்டு என தொடரை சமன் செய்து விட்டது. இந்த வகையில் இந்திய அணி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று தான் நான் சொல்வேன்” என தெரிவித்திருக்கிறார்.






