674 ரன்ஸ்.. டெல்லி நவ்தீப் ஷைனி நாடகம்.. தமிழ்நாடு அணியின் வெற்றி பறிபோனது.. ரஞ்சி டிராபி 2024

0
1904
Sundar

நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி வினோதமான முறையில் டிராவில் முடிவடைந்தது.

தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் ரஞ்சி டிராபி தொடரின் போட்டி நடைபெற்றது. முந்தைய போட்டியில் தமிழ்நாடு புஜாரா விளையாடும் சௌராஷ்ட்ரா அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாய் சுதர்சன் வாஷிங்டன் சுந்தர் கலக்கல்

இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு சாய் சுதர்சன் 213, வாஷிங்டன் சுந்தர் 152, பிரதோஸ் ரஞ்சன் பால் 117 என மூவர் சதம் அடித்தார்கள். தமிழக அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 674 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு யாஸ் துல் ஆட்டம் இழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 266 ரன்கள் மட்டும் எடுத்து பாலோ ஆன் ஆகியது. தமிழக அணி டெல்லி அணிக்கு பாலோவ் ஆன் கொடுத்தது. தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நவ்தீப் ஷைனி ஆடிய நாடகம்

இன்று நான்காவது மற்றும் கடைசி நாளில் விளையாடிய டெல்லி அணியை எட்டு விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இறுதிக் கட்டத்தில் இருந்தது. தமிழக அணி கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு பீல்டர்களை முழுவதுமாக உள்ளே கொண்டு வந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் பேட்டிங்கில் இருந்த இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி பேட்டிங் முனையில் இருந்தார். அப்போது வீசப்பட்ட ஒரு பந்து அவரது தோள்பட்டையை உரசி சென்றது. உடனே அவர் தனக்கு எதுவும் ஆகவில்லை என தம்ஸ் அப் சிக்னல் காட்டினார். ஆனால் ஒரே நொடியில் அந்த முடிவை மாற்றிக் கொண்டு, தனக்கு அடிபட்டு விட்டதாக அப்படியே தரையில் விழுந்து விட்டார்.

இதையும் படிங்க : பிசிசிஐ ரொம்ப ஓவர்.. இந்த டி20 தொடர் தேவையா.? இப்படி இருந்தா எப்படி உள்நாட்டு கிரிக்கெட் வளரும் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

காரணம், போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக இந்த நாடகத்தை அவர் திடீரென ஆடினார். இந்த நிலையில் நடுவர்கள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் போட்டியை வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடித்து வைத்தார்கள். தற்பொழுது நவ்தீப் சைனி நடந்து கொண்ட விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டது. ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -