பாக் தொடர்.. வலிமையான பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரருக்கு இடமில்லை.. சவால் விடும் பாஸ்ட் பவுலர்ஸ்

0
919

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

இதில் ஒரு சில காரணங்களால் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. மேலும் நட்சத்திர வங்கதேச வீரரும் இந்த டெஸ்ட் தொடருக்கு திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு 16 பேர் கொண்ட அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது மற்றும் மூத்த விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்கு திரும்பி இருக்கின்றனர். இதில் சிஎஸ்கே வீரரான முஸ்தஃபிகுர் ரஹ்மான் இந்த தொடரில் இடம் பெறவில்லை

இதில் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது கடந்த ஜூன் மாதம் 2023ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். அதற்குப் பிறகு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வு பெற்ற வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவாமி லீக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆல்ரவுண்டர் ஷகிப் ஆல்கஹசன் பெயரும் இந்த தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குறிப்பாக ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வங்கதேச தேர்வு குழு தலைவர் காசி அஷ்ரப் ஹுசைன் பாகிஸ்தான் தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தத் தொடருக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுத்தோம். இது அனைத்து துறைகளிலும் சமநிலை கொண்ட வலிமையான அணி. முஸ்பிகுர், மொமினுல், ஷகிப் ஆகியோர் இணைந்து 216 போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். சுழலும் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிக்கும். தஸ்கின் அகமது இரண்டாவது டெஸ்டில் மட்டுமே விளையாடுவார் என்பதை மனதில் வைத்தே ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தோம். அவர் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பந்து வீசவில்லை என்பதால் அவருக்கு சரியான பந்துவீச்சு ரிதம் வருவதற்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் அவரை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஷமி திரும்ப வரப்போறார்.. ஆனா அவருக்காக கம்பீர் இதை செய்தே ஆகணும் – இந்திய முன்னாள் பவுலிங் கோச் பேட்டி

பாகிஸ்தான் டெஸ்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (சி), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் இஸ்லாம், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

- Advertisement -