வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியிடம் டி20 கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது.
தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி இழந்தது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான பந்துவீச்சு
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் 3, சௌமியா சர்க்கார் 11, தன்சிம் ஹசன் 2, ரிசாத் ஹுசைன் 5, மெகதி ஹசன் 11 என சொற்ப ரன்னில் வெளியேற ஏமாற்றம் தந்தார்கள்.
இந்த நிலையில் மெகதி ஹசன் மிராஸ் 25 பந்தில் 26 ரன்கள், ஜாகீர் அலி 20 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்கள். கடைசி கட்டத்தில் வந்த சமீம் ஹோசைன் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
83 ரன்னுக்கு 10 விக்கெட்
இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மண்ணில் ஒட்டுமொத்தமாக சரிந்தது. அந்த அணியின் சார்லஸ் 14, பிரண்டன் கிங் 8, ஆண்ட்ரே ப்ளக்சர் 5, நிக்கோலஸ் பூரன் 5, கேப்டன் ரோமன் பவல் 6, ரோமாரியோ ஷெப்பர்ட் 0 என நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் பெரிதாக எதையும் செய்யாமல் வெளியேறினார்கள்.
இதையும் படிங்க : உண்மை அஸ்வின் பேசும்போது வெளிவரும்.. அவர் இதுல விரக்தி அடைஞ்சுட்டாரு – பிரட் லீ பிராட் ஹேடின் பேச்சு
ஒரு கட்டத்தில் 19 ரன்னுக்கு ஒரு விக்கெட் கூட இழக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 83 ரன்னில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 34 பந்தில் 32 ரன், அகேல் ஹுசைன் முப்பத்தி ஒரு பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அஹமத் 3 விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 வெற்றி பெற்ற பங்களாதேஷ் தொடரை கைப்பற்றியது.






