பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்றாவது நாளின் முதல் செஷனில் 280 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரில் உன் நிலை வகிக்கிறது. மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே அணி அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் ஏதாவது முக்கிய வீரர்களுக்கு தேவைப்பட்டால் ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தார்கள்.
இப்படியான நிலையில் தற்பொழுது இந்திய தேர்வுக்குழு பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் இல்லாத அணி
சற்றுமுன் பிசிசிஐ பங்களாதேஷ் அணிக்கு எதிராக அறிவித்துள்ள இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் முதல் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட அதே 15 பேர் கொண்ட அணியே பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பிசிசிஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கும் பொழுது ” பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய ஆண்கள் அணிக்கான கிரிக்கெட் தேர்வுக்குழு அதே அணியை மீண்டும் தக்க வைத்திருக்கிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ருதுராஜ் மற்றும் இசான் கிஷான் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : பாக் டீம ஜெயிச்ச மாதிரி.. இந்தியாவ ஜெயிக்கணும்னா நாங்க இந்த விஷயத்துல கூடுதல் கவனம் செலுத்தணும் – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (வி.கீ), துருவ் ஜூரல் (வி.கீ), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயால்.