இந்திய கிரிக்கெட்

ஜிம்பாப்வே தொடர்.. புதிய கேப்டன்.. 15 பேர் கொண்ட இளம் இந்திய அணி அறிவிப்பு.. 4 புதுமுக வீரர்கள்.. சீனியர் வீரர்களுக்கு இடமில்லை

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ மூத்த வீரர்கள் இல்லாத இளம் வீரர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட அணியை சற்று முன் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

ஜிம்பாபே டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த அணியில் அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், துருவ் ஜுரல், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் துஷார் தேஷ் பாண்டே என ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்தில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் மற்றும் அபிஷேக் சர்மா என 4 வீரர்கள் இருக்கிறார்கள். இத்துடன் பேட்டிங் வரிசையில் ரிங்கு சிங், ரியான் பராக் ஆகியோர் வருகிறார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நிதீஷ் குமார் ரெட்டி, சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார்கள். பிரதான சுழல் பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய் இடம் பெற்று இருக்கிறார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் தரப்படவில்லை.

இதையும் படிங்க: கம்பீர் செக் வைக்கும் 4 வீரர்கள்.. 2 உலக கோப்பைக்கு ரெடியாகும் மாஸ்டர் பிளான்ஸ்.. அதிரடி மாற்றங்கள்

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட அணி :

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (வி. கீ), துருவ் ஜூரல் (வி. கீ), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே.

Published by