“ஆட்டத்தை மாற்றிய அந்த இரண்டு ஓவர்கள்” வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா!

0
5685

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆன நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது .

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக ஆடி 12 ரன்கள் எடுத்தார் . மேலும் முதல் இமேஜில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் 70 ரண்களையும் பேட்டிங்கில் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் கைப்பற்றினார் . இதனால் ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது .

- Advertisement -

இந்நிலையில் போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பேசிய கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா அணிக்காக டெஸ்ட் அணியில் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார் . மேலும் தான் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக நிறைய டெஸ்ட் போட்டிகளை காயம் மற்றும் மருத்துவ காரணங்களால் தவறவிட்டிருக்கின்றேன் என குறிப்பிட்ட அவர் இந்திய அணிக்காக மீண்டும் ஆட வந்து சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என தெரிவித்தார் . மேலும் இது போன்ற ஆடுகளங்களில் ஒரு பேட்ஸ்மேன் தனக்கான நேரத்தை எடுத்து நிதானமாக ஆட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இந்த ஆடுகளங்களில் அதிகமான ஸ்வீட் சாட்டுகளையும் மற்றும் கால்களை நகர்த்தி ஆடுவது ரன் குவிப்பிற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார் .

இது போன்ற ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானவை என்றாலும் வேகப்பந்துவீச்சாளர்களும் இந்த ஆடுகளங்களில் ஆபத்தானவர்கள் எனக் குறிப்பிட்டார் ரோஹித் சர்மா . மேலும் இந்த டெஸ்ட் போட்டியின் துவக்க நாளில் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் வீசிய அந்த இரண்டு ஓவர்கள் தான் இந்தப் போட்டியின் முக்கியமான திருப்புமனைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார் . அந்த ஓவர்கள் தான் ஆஸ்திரேலியா அணியை பின்னுக்கு தள்ளியது . அதன் பின் அவர்களால் அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை எனக் கூறினார் ரோஹித் . ஒரு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை இது போன்ற பெரிய வெற்றியுடன் துவங்குவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர் கடந்த காலங்களில் நிறைய டெஸ்ட் போட்டிகளை காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது ஒரு துரதிஷ்டவசமான ஒன்று எனக் கூறினார் .

சுழல் பந்துவீச்சிக்கு ஒத்துழைக்கும் இது போன்ற ஆடுகளங்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்த அளவே பந்து வீசினாலும் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என பாராட்டினார் ரோஹித் . அடுத்த டெஸ்ட் போட்டியினை வெற்றியுடன் தொடங்குவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் .

- Advertisement -