பெரிய புகழுக்கான காரணத்தை தல தோனி நிரூபிப்பார் சேப்பாக்கம் வாங்க! – சின்ன தல சுரேஷ் ரெய்னா மாஸ் பேட்டி!

0
252
Raina

உலகின் நம்பர் 1 டி20 லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் 16ஆவது சீசன் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது!

இந்த முறை 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, எதிர் பிரிவில் உள்ள ஐந்து அணிகளுடன் தலா இரண்டு போட்டிகள் என பத்து போட்டிகள், சொந்த பிரிவில் உள்ள நான்கு அணிகளுடன் தலா ஒரு போட்டிகள் என நான்கு போட்டிகள் என மொத்தம் 14 போட்டிகளை ஒவ்வொரு அணிகளும் விளையாட உள்ளது. கடந்த முறை இது அப்படியே நேரெதிராக அமைந்திருந்தது. மேலும் வழக்கம் போல் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்ட அணிகள் நடப்பு சீசனின் முதல் போட்டியில் மோதவில்லை!

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி இந்த ஐபிஎல் தொடரில் சுவாரசிய விஷயமாக எல்லா அணிகளும் தங்களின் சொந்த மைதானத்தில் தலா 7 போட்டிகளை விளையாட இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் மும்பையில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்பொழுது அணிகளின் சொந்த மைதானங்களுக்கு திரும்பி இருக்கிறது. இதில் சென்னை அணி கூடுதலாக ஒரு வருடத்தை சேப்பாக்கத்தில் இழந்து நான்கு வருடங்கள் கழித்து விளையாட இருக்கிறது!

சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் அடையாளங்களில் தோனிக்கு அடுத்து வரக்கூடியவர். சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர். சென்னை அணிக்காக அதிக அரை சதங்கள் அடித்த வீரர். ஐபிஎல் தொடரில் நாக்அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர். ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர். ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என சுரேஷ் ரெய்னா எக்கச்சக்க சாதனைகளை சிஎஸ்கே அணிக்காக செய்திருக்கிறார். இவர் கடைசியாக அணியில் இடம்பெறாத இரண்டு சீசன்கள்தான் சென்னை அணி ஒட்டுமொத்த ஐபிஎல் சீசன் 15 ஆண்டுகளில் பிளே ஆப் ரவுண்டுக்கு இடம் பெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது சிஎஸ்கே அணி குறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா ” ரவீந்திர ஜடேஜா பேட் மற்றும் பந்துவீச்சில் தற்பொழுது மிகவும் சிறப்பாக இருக்கிறார். அவர் தோனிக்கு மிகவும் உதவியாக இருப்பார். அவர் மிகவும் வலுவுடனும் உடல் தகுதியுடனும் இருப்பதால் மிகச் சிறந்த மறுவாழ்வை பெற்றுள்ளார். அவர் சேப்பாக்கம் செல்லும் பொழுது தோனிக்கு போலவே அவருக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா ” ருதுராஜ் முதல்முறையாக சேப்பாக்கத்தில் விளையாட இருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரர். நிச்சயமாக அவர் சிறப்பாக செயல்படுவார். மகேந்திர சிங் தோனியும் சேப்பாக்கம் சென்று விசில் போடு யெல்லோ டீம் ரசிகர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருப்பார். உற்சாகமாக இருங்கள் நாங்கள் அங்கு வெற்றியோடு துவங்குவோம்” என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்!